Cinema News
விஜயகாந்தை அப்படி திட்டினேன்!. ஆனா அங்க போகும்போது!.. கண் கலங்கி நெகிழும் பிரபலம்!…
விஜயகாந்த் எப்படிப்பட்டவர் என்பது மக்களுக்கு தெரியும். மிகவும் பண்புள்ள மனிதர் இவர். அதோடு, எப்போதும் எல்லோருக்கும் உதவிக்கொண்டே இருந்தவர். அவர் செய்த உதவிகளில் 10 சதவீதம்தான் வெளியே தெரிந்தது. இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாது என சொல்வது போல பலருக்கும் பல உதவிகளை செய்திருக்கிறார்.
குறிப்பாக பசியோடு வரும் பலருக்கும் உணவளித்தார். அவரின் அலுவகத்திற்கு எப்போது போனாலும் உணவு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை பலரிடமும் உருவாக்கி இருந்தார். சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர் இவர். பல அவமானங்களை பார்த்ததால் அது மற்றவர்களுக்கு நடக்கக் கூடாது என நினைத்தார்.
இதையும் படிங்க: அசால்ட் பண்ணி அடிச்சி தூக்கிய சத்யராஜ்!.. அசந்து போன விஜயகாந்த்!. அப்படி என்னதான் நடந்துச்சு?.
துவக்க காலத்தில் திரை உலகில் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தாரோ அது தன்னால் மற்றவர்களுக்கு நடக்கக்கூடாது என்பதில் கடைசி வரை உறுதியாக இருந்தார் விஜயகாந்த். அதனால்தான் 30க்கும் மேற்பட்ட இயக்குனர்களை அறிமுகம் செய்தார். பல நடிகர்களை அறிமுகம் செய்து வைத்தார். கீழ்மட்டத்திலிருந்த பலரையும் தயாரிப்பாளர் ஆக்கினார்.
மனதிற்குள் எந்த வன்மமும், காழ்ப்புணர்ச்சியும், சுயநலமும் இல்லாமலே கடைசி வரை வாழ்ந்தார் அவர். அவரின் வாழ்க்கை பலருக்கும் பாடம்தான். அவரிடம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. தன்னை திட்டியவர்களை கூட பாராட்டி பேசும் பெரிய மனம் கொண்டவர் அவர். அரசியலில் இறங்கிய பின் பல விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால், எதையுமே அவர் கண்டுகொண்டதில்லை.
இதையும் படிங்க: நடிக்க மறுத்த விஜயகாந்த்!. பிரபு, சத்தியராஜ் நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள்!..
சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய பட்டிமன்றம் புகழ் திண்டுக்கல் லியோனி ‘தேர்தல் பிரச்சாரத்தில் நான் விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். நக்கலடித்து பேசி இருக்கிறேன். ஆனால், ‘நீங்கள் என்னை பற்றி பேசியது சிறப்பாக இருந்தது’ என ஒருமுறை என்னை பாரட்டினார். அப்படிப்பட்ட மனசு எல்லாம் யாருக்கும் வராது.
விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த போன போது ‘நாம் அவரை எப்படியெல்லாம் பேசி இருக்கிறோம். அங்கே போனால் தேமுதிக தொண்டர்கள் என்னிடம் கோபத்தை காட்டினால் என்ன செய்வது என யோசித்து காவல்துறையிடம் உதவி கேட்டேன். ஆனால், தேமுதிக தொண்டர்கள் என்னை அழைத்து சென்று அஞ்சலி செலுத்த வைத்து என்னை வழியனுப்பி வைத்தார்கள். நெகிழ்ந்து போனேன். அதுதான் உண்மையான அரசியல் நாகரீகம்’ என நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.