Connect with us
sruthi

Cinema News

ஸ்ருதிஹாசனுக்காக அந்த நடிகையை கழட்டிவிட்ட ஐஸ்வர்யா ரஜினி!… இப்படியெல்லாம் நடந்துச்சா!..

Sruthihaasan: நடிகர்களில் சிலர் நண்பர்களாக இருப்பது போல அவர்களின் வாரிசுகளும் நண்பர்களாகவே இருக்கிறார்கள். ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, விஷால், கார்த்தி, விஜய், சூர்யா என இவர்கள் எல்லோருமே வாரிசு நடிகர்கள்தான். இதில், சிலருக்குள் மட்டும் நல்ல நட்பு உண்டு. கார்த்தியும் விஷாலும் நல்ல நண்பர்கள். ஜெயம் ரவியும், ஜீவாவும் ‘வாடா போடா’ நண்பர்கள்

விஜயும், சூர்யாவும் நண்பர்கள் என்றாலும் நெருக்கமான நண்பர்கள் இல்லை. இப்படி திரையுலகில் பல நட்புகள் இருக்கிறது. இதில் ரஜினியும், கமலும் மட்டுமே விதிவிலக்கு. ரஜினி சினிமாவில் நடிக்க வந்தது முதல் கமலுடன் நட்பாக இருந்து வருகிறார். ஒரு மேடையில் ‘என்னையும் ரஜினியும் போல நல்ல நண்பர்கள் சினிமாவில் ஒருவனும் இல்லை’ என கமல் ஆக்ரோஷமாக பேசினார்.

இதையும் படிங்க: அஜித்தை போல் வாழ்ந்த சுஜாதா.. அவரின் மரணம் பெரிதாக பேசப்படாததற்கு காரணம் இதுதான்

கமல்ஹாசனும், ரஜினியின் திரையுலகில் எப்படி நண்பர்களாக இருக்கிறார்களோ அவர்களின் வாரிசுகளும் தோழிகளாகவே இருக்கிறார்கள். ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கும் இடையே நல்ல நட்பு இருப்பது பலருக்கும் தெரியாது.

தனுஷை திருமணம் செய்த ஐஸ்வர்யா சில வருடங்களுக்கு பின் தனுஷை வைத்து இயக்கிய திரைப்படம்தான் 3. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்தார். இந்த படம் உருவாவதற்கு முன்பு தனுஷும் அனிருத்தும் இணைந்து உருவாக்கிய ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உலகமெங்கும் பிரபலமானது.

இதையும் படிங்க: முடிஞ்சா என்கிட்ட மோதி ஜெயிச்சு பாரு! சூப்பர் ஸ்டாருக்கு சேலஞ்ச் விட்ட பவர் ஸ்டார்

3 படம் துவங்கிய போது ஸ்ருதிஹாசனின் கால்ஷீட் இல்லை. அவர் பிஸியாக இருந்ததால் அமலாபால்தான் கதாநாயகியாக நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தபின் ‘இப்ப நான் ஃபிரியா இருக்கேன்’ என ஐஸ்வர்யாவிடம் ஸ்ருதி சொல்ல அமலாபால் தூக்கப்பட்டு ஸ்ருதிஹாசன் நடித்தார்.

amala

ஆனால், இந்த படத்தில் நடித்ததால் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டு அது ஐஸ்வர்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் அப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top