அருமையான வாய்ப்பை எம்ஜிஆருக்காக விட்டுக் கொடுத்த ஜெய்சங்கர்… எந்தப் படத்திற்கு தெரியுமா?

Published on: April 14, 2024
JS, MGR
---Advertisement---

எம்ஜிஆர், சிவாஜியின் காலகட்டத்தில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு நடிப்பில் மாஸ் காட்டியவர் நடிகர் ஜெய்சங்கர். இவரது நடிப்புக்கு தாய்க்குலங்களின் ஆதரவு அதிகம். தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான நடிகர். இவர் நடித்த படங்கள் நஷ்டமே வராதாம். அதே போல கொடுத்த சம்பளத்தை வாங்கிக் கொள்வாராம். இவர் ஒருமுறை எம்ஜிஆருக்காக தனக்கு வந்த ஒரு அருமையான சினிமா வாய்ப்பை விட்டுக் கொடுத்துள்ளார். எப்படி என்று பார்ப்போமா…

இரவும் பகலும், பஞ்சவர்ணக்கிளி, நீ எங்க வீட்டுப் பெண், குழந்தையும்; தெய்வமும் என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்டு என்றும் அழைக்கப்பட்டார்.

ஒருமுறை எம்ஜிஆருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். அந்தப் படத்தில் நடிக்க முதல் நாளில் படப்பிடிப்புக்குச் சென்றார் ஜெய்சங்கர். 3 மணி நேரம் காத்திருந்தார். ஆனாலும் படப்பிடிப்பு தொடங்கவில்லையாம். இது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாம்.

Anbe vaa
Anbe vaa

தன்னை நம்பி பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். ஒரு படத்திற்கு இவ்வளவு நேரம் என்னால் ஒதுக்க முடியாது என்று முடிவு செய்த அவர் அந்த நாளே படத்தில் இருந்து விலகிக்கொண்டாராம். அதனால் எம்ஜிஆர் அவர் மீது வருத்தத்தில் இருந்தாராம்.

இந்த நிலையில் தான் அந்த அருமையான வாய்ப்பும் ஜெய்சங்கருக்கு வந்தது. அது ஏவிஎம் நிறுவனத்தின் அன்பே வா பட வாய்ப்பு. இந்தப் படத்தில் முதலில் ஜெய்சங்கர் தான் நடிப்பதாக இருந்ததாம். அதனால் அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமும் ஆகி விட்டார். அதே நேரம் அந்தப் படத்திற்கான கதையைக் கேட்ட எம்ஜிஆருக்கு அந்தப் படத்தில் நடிக்க ஆசை வந்ததாம். இதை அறிந்த ஜெய்சங்கர் எம்ஜிஆருக்காக தான் நடிக்க இருந்த அந்தப் படத்தை விட்டுக்கொடுத்தாராம்.

சிலர் பழிக்குப் பழி வாங்குவார்கள். ஆனால் ஜெய்சங்கர் அப்படியல்ல. முட்டினாலும், மோதினாலும் அடுத்தவருக்காக விட்டுக் கொடுப்பதில் வள்ளல்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.