
Cinema News
கேப்டன் செய்த விசயம்.. நெகிழ்ந்துபோன பிரபல நடிகை!.. இப்படி கூடவா உதவி செய்வாரு கேப்டன்!..
Published on
By
நடிகர் விஜயகாந்த் உதவி செய்வதில் எப்படிப்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் பல கஷ்டங்களையும், அவமானங்களையும் பார்த்து மேலே வந்தவர் என்பதால் தன்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என முடிவெடுத்து கடைசிவரை அதை செய்து வந்தார்.
எம்.ஜி.ஆரை போல சம்பாதித்ததில் பெரும்பங்கு மற்றவர்களுக்கு உதவி செய்யவே பயன்படுத்தினார். பசித்தவர்களுக்கு உணவு, சினிமாவில் வளர வாய்ப்பு, தேவைப்படுபவர்களுக்கு பணம் என பலருக்கும் பல வகைகளிலும் உதவியவர்தான் விஜயகாந்த். பல புதிய தயாரிப்பாளர்கள், இயக்குனர் மற்றும் நடிகர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஹாலிவுட் பட கதையில் மகனுடன் நடிக்க ஆசைப்பட்ட விஜயகாந்த்!.. அட நடக்காம போச்சே!…
தனக்கு தெரிந்து ஒருவருக்கு ஏதோ ஒருவகையில் பிரச்சனை எனில் அவர்களிடம் அது பற்றி கேட்டு தன்னால் என்ன முடியுமோ அதை செய்து கொடுப்பதுதான் விஜயகாந்தின் பழக்கம். இதனால்தான் திரையுலகில் எல்லோருக்கும் விஜயகாந்தை பிடிக்கும். அதனால்தான் பலருக்கும் அவர் மீது அன்பும், மரியாதையும் இருந்தது.
திரையுலகில் விஜயகாந்தால் பலன் பெற்றவர்கள் பலரும் இருக்கிறார்கள். அதனால்தான் அவர் மரணமடைந்தபோது அவ்வளவு கூட்டம் கூடியது. அவரின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டபோது பொதுமக்களே மேலிருந்து பூக்களை தூவி அவருக்கு மரியாதை செய்தார்கள்.
இதையும் படிங்க: 22 முறை கமலுடன் மோதிய விஜயகாந்த் படங்கள்… ஜெயித்தது கேப்டனா? உலகநாயகனா?..
சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் சாந்தி வில்லியம்ஸ். விஜயகாந்த், இஷா கோபிகர் ஆகியோர் நடித்து 2001ம் வருடம் வெளிவந்த திரைப்படம் நரசிம்மா. இந்த படத்தில் விஜயகாந்தின் அண்ணியாக சாந்தி வில்லியம்ஸ் நடித்திருந்தார். ஒருநாளைக்கு 10 ஆயிரம் சம்பளம் என பேசி இரண்டு நாட்கள் நடித்திருக்கிறார். எனவே, அவருக்கு 20 ஆயிரம் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால், அவரிடம் ஒரு லட்சம் கொடுத்திருக்கிறார்கள்.
‘எதற்கு ஒரு லட்சம்?’ என அவர் மேனேஜரிடம் கேட்க ‘கேப்டன்தான் கொடுக்க சொன்னார்’ என சொல்லி இருக்கிறார். அந்த நேரம் அங்கே காரில் வந்து இறங்கினார் விஜயகாந்த். ‘அங்க என்ன பிரச்சனை?’ என அவர் கேட்க மேனேஜர் நடந்ததை சொல்லி இருக்கிறார். சாந்தி வில்லியம்ஸை பார்த்து ‘பரவாயில்லை. இந்த பணத்தை வைத்துக்கொள்ளுங்கள்’ என கண்ணாலேயே சொல்லிவிட்டு போய்விட்டாராம் விஜயகாந்த். அந்த பணம் அப்போது பல பிரச்சனைகளிலிருந்தும் தன்னை காப்பாற்றியதாக சாந்தி வில்லியம்ஸ் ஊடகம் ஒன்றில் சொல்லி இருந்தார்.
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...