Cinema News
‘இந்தியன்’ படத்தை விட என் படம்தான் அதிக வசூல்.. ஷாக் கொடுத்த இயக்குனர்! யாருக்காவது தெரியுமா
INDIAN: 1996 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் அந்த நேரத்தில் அரசியல் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு முதியவராக கமல் நடிக்க ஊழலை எதிர்த்து சட்டத்தை எதிர்பார்க்காமல் தானே தண்டனை கொடுக்கும் ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் இந்தியன் தாத்தாவாக கமல் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ரலா மற்றும் சுகன்யா நடித்திருந்தனர். அவர்களுடன் சேர்ந்து செந்தில், கவுண்டமணி என பல முக்கிய நடிகர்களும் நடித்திருந்தனர். படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இந்தியா முழுவதும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இதையும் படிங்க: நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா… தெலுங்கு பக்கம் சாய்ந்த ரஜினிகாந்த்.. பெத்த கோடி சம்பளமாம்!…
ஆனால் படத்தால் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு நஷ்டம் என பிரபல இயக்குனர் வி.சேகர் கூறினார். எல்லாமே என் பொண்டாட்டிதான், காலம் மாறிப்போச்சு , விரலுக்கேத்த வீக்கம் போன்ற குடும்ப பாங்கான படங்களை கொடுத்து அதிக லாபம் பார்த்தவர்தான் வி.சேகர். இந்தியன் படம் முடித்த கையோடு ஏ.எம்.ரத்னம் வி.சேகரை தேடி சென்றிருக்கிறார்.
அவரிடம் எனக்கு ஒரு படம் எடுத்துக் கொடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். வி.சேகருக்கு ஒரே ஷாக்காம். உடனே ரத்னத்திடம் சேகர் ‘இந்தியன் படம் எவ்வளவு பெரிய ஹிட். என்னை தேடி வந்திருக்கிறீர்கள்?’ என கேட்டிருக்கிறார். அதற்கு ரத்னம் ‘படத்திற்கான செலவு அதிகமே தவிர வந்த லாபம் குறைவுதான். எனக்கு கொஞ்சம் நஷ்டமாகிவிட்டது. அதனால் உன்னை வைத்து அடுத்த படத்தை எடுத்தால் கொஞ்சமாவது லாபத்தை பார்த்துவிடுவேன்’ என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: இழுத்து மூடினாலும் எடுப்பா தெரியுது அழகு!.. ரேஷ்மாவை நாட்டுக்கட்ட என வர்ணிக்கும் ரசிகர்கள்!..
ஏனெனில் இந்தியன் படம் வெளியான அதே நேரத்தில்தான் வி.சேகரின் காலம் மாறிப்போச்சு படமும் வெளியாகியிருக்கிறது. உதாரணமாக இந்தியன் படத்தின் செலவு 90000 எனில் வசூல் 1 கோடி. ஆனால் காலம் மாறிப்போச்சு படத்தின் செலவு 30000 எனில் செலவு 90000 என்ற விகிதத்தில் வந்ததனால் தான் ரத்னம் கம்மியான பட்ஜெட்டில் படம் எடுத்து லாபம் பார்த்துவிட்டு போய்விடலாம் என்ற நோக்கத்தில் சேகரை அணுகியிருக்கிறார்.