ஸ்டிரிக்டான ஆஃபிஸரா? ‘எந்திரன்’ படப்பிடிப்பு சமயத்தில் ரஜினியிடம் மாட்டிக் கொண்ட சந்தானம்

Published on: April 21, 2024
san
---Advertisement---

Rajini Santhanam: தமிழ் சினிமாவில் ரஜினியை பிடிக்காதவர்கள் என யாருமே இருக்க மாட்டார்கள். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பிடித்த ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 70களில் ஆரம்பித்த தனது சினிமா பயணத்தை இன்று வரை வெற்றிகரமாக பயணித்து வருகிறார். கிட்டத்தட்ட பொன்விழா ஆண்டை நெருங்க இருக்கிறார்.

ரஜினியின் பொன்விழா ஆண்டை தமிழ் சினிமா கோலாகலமாக கொண்டாட இருக்கிறது. சினிமா திரைப்பிரபலங்கள் பலரும் ரஜினியின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். ஏன் விஜய் மற்றும் தனுஷ் ரஜினியை பின்பற்றியே அவர்களின் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். விஜயின் பெரும்பாலான படங்களிலும் சரி தனுஷின் நடிப்பிலும் சரி ரஜினியின் சாயலை பார்க்க முடியும்.

இதையும் படிங்க: கண்ணதாசன் வாங்கிய சத்தியம்!. எம்.ஜி.ஆர் அழைத்தும் போகாத வாலி!.. இது செம மேட்டரு!..

விஜய் , தனுஷ் இவர்கள் வரிசையில் சந்தானமும் ரஜினியின் தீவிர ரசிகராம். ரஜினியுடன் எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என சந்தானம் வெறிகொண்டு இருந்தாராம். அவர் நினைத்ததை போலவே எந்திரன் படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க கூடிய வாய்ப்பு சந்தானத்திற்கு கிடைத்தது.

ஷாட் ரெடியானதும் ரஜினி அவருடைய டையலாக்கை பேசிவிட்டாராம். ஆனால் சந்தானத்தின் காட்சி வரும் போது சந்தானம் அமைதியாகவே இருந்தாராம். ரஜினியை பார்த்துக் கொண்டே இருந்தாராம். உடனே ரஜினி சந்தானம் என்னாச்சு என கேட்க அதற்கு சந்தானம் உங்க நடிப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: கோடி கேட்டா தரமாட்றாங்க! எனக்கும் வேற வழி தெரியல.. ஒரே ஒரு போட்டோவால் பீதியை கிளப்பிய கவின்

அதற்கு ரஜினி நான் நடிக்கிறதை நீங்கள் பார்த்துவிட்டீர்கள். நீங்கள் நடிப்பதை நான் பார்க்க வேண்டாமா? என கேட்டாராம். ரஜினியோடு பணியாற்றுவது என்பது ஒரு ரசமான அனுபவம். செட்டில் ஏதாவது கலாட்டா செய்தால் அவரும் சேர்ந்து நம்முடன் கலாட்டா செய்வார். காமெடியில் எதாவது பன்ச் வசனம் பேசினால் உடனே சூப்பர் சூப்பர் என பாராட்டுவார்.

எந்திரன் படத்தில் எனக்கும் அவருக்கும் ஒரு சீரியஸ் சீன். அதில் நடிக்க நான் நிஜமாகவே சிரமப்பட்டேன். அதற்கு ரஜினி காமெடினா சர சரவென பேசுகிறாய். சீரியஸ் சீனில் சிக்கிட்ட பார்த்தீயா? என கேட்டாராம். ரஜினியை பொறுத்தவரைக்கும் அவர் ரொம்ப ஸ்டிரிட். அதே நேரம் ரொம்ப சாஃப்ட் என ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூறினாராம் சந்தானம்.

இதையும் படிங்க: அப்படின்னா லிங்கா படம் தோல்வி இல்லையா!.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.