ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு! ஸ்டன்னிங் லுக்கில் அஜித் – ஷாலினி

Published on: April 26, 2024
shalini
---Advertisement---

Ajith Shalini : தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 24 ஆண்டுகளாக காதல் தம்பதிகளாக ஜொலித்துக் கொண்டிருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி. இருவருமே அவரவர் கெரியரில் பிஸியாக இருந்த சமயத்தில் பல நல்ல ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றனர்.

‘அமர்க்களம்’ படத்தின் மூலம் முதன் முதலாக சேர்ந்து நடித்த அஜித்  -ஷாலினி அந்தப் படத்தில் இருந்து இருவரும் மனதார காதலிக்க தொடங்கினர். அந்த படம் முடிந்ததுமே அவர்களின் நிச்சயதார்த்தம் நடந்து திருமணத்திலும் முடிந்தது. அந்த நேரத்தில் அஜித் ஷாலினிக்காக செய்த சின்ன சின்ன செயல்கள் மற்றும் அஜித்துக்காக ஷாலினி செய்த செயல்கள் என அமர்க்களம் படத்தின் இயக்குனர் சரண் ஒரு சில பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: பில்லா நயன்தாரா இஸ் பேக்!.. விருது விழாவுக்கு உச்சகட்ட கிளாமரில் சென்ற லேடி சூப்பர் ஸ்டார்!..

அவர்கள் இருவரின் காதலுக்கு நானும் உறுதுணையாக இருந்திருக்கிறேன் என்று சரண் கூறியிருக்கிறார். முதலில் அமர்க்களம் படத்தில் நடிக்க முடியாது என ஷாலினி சொல்ல அதன் பிறகு அஜித்தே ஷாலினியிடம் பேசி இருக்கிறார். அஜித் பேசிய பிறகு தான் ஷாலினி அமர்க்களம் படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே அஜித் மீது ஷாலினிக்கு ஒருவித ஈர்ப்பு இருந்துள்ளது. அந்த ஒரு காரணத்தினால் தான் இந்த படத்தில் அஜித் பேசிய பிறகு ஷாலினி நடிக்க சம்மதிக்க, இப்படி இந்த படத்தின் மூலம் மலர்ந்த இவர்களது காதல் இன்று வரை 24 ஆண்டுகள் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் இவர்கள் தங்களுடைய 24 வது திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.

ajith
ajith

இதையும் படிங்க: முத்துவால் ரோகிணியிடம் சிக்கிய ஜீவா!.. காசை கேட்டு சண்டைக்கு நிற்கும் மனோஜ்…

ஒரு பக்கம் சினிமா இன்னொரு பக்கம் ரேஸ் என பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தனது குடும்பத்துடனும் தனது மகிழ்ச்சியான நேரத்தை செலவழித்துக் கொண்டுதான் வருகிறார் அஜித். தனது மகன், மகள் ஷாலினி இவர்களுடன் அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வருகிறார் அஜித். இந்த நிலையில் தனது மனைவி ஷாலினியுடன் அஜித் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தில் இருவருமே பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறார்கள். மேலும் அதை பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவரையும் மனதார வாழ்த்தி வருகின்றார்கள்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.