ரட்சகன் படத்தை இயக்கிய பிரவீன் காந்தி பிரசாந்தை வைத்து ஜோடி மற்றும் ஸ்டார் படங்களை இயக்கியுள்ளார். பிரசாந்துக்கு ஜோடியாக சிம்ரன் ஜோடி படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் பிரவீன் காந்தி இயக்கத்தில் பிரசாந்த் நடித்த ஸ்டார் படம் வெளியானது.
ஸ்டார் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். வில்லனாக ரகுவரன் மாஸ் காட்டியிருப்பார். அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்நிலையில், அதே தலைப்பில் பல வருடங்கள் கழித்து கவின் நடிப்பில் ஸ்டார் திரைப்படம் உருவாகியுள்ளது.
Also Read
இதையும் படிங்க: த்ரிஷ்யம் இயக்குனர் படத்தில் அமலா பால்!.. ஆடு ஜீவிதம் படத்துக்கு அடுத்து இன்னொரு ஜாக்பாட்டா?..
இரண்டு படங்களின் கதைகளும் வேறாக இருந்தாலும் டைட்டில் ஒன்றுதான். இந்நிலையில், பிரசாந்த்தின் ஸ்டார் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பிரவீன் காந்தி இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் தயாரிப்பாளரிடம் தங்களிடம் ஏன் அனுமதி வாங்கவில்லை என்றும் ஏதாவது உரிமைத் தொகை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால், கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தில் தயாரிப்பாளர் எந்த ஒரு ரெஸ்பான்ஸும் கொடுக்கவில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் சேம்பர் உள்ளிட்டவற்றில் முறையிட்டும் யாரும் நலிந்த தயாரிப்பாளருக்கு உதவும் முன் வரவில்லை என்று கூறுகின்றனர்.
இதையும் படிங்க: வைரமுத்துவுடன் போட்டி போட்ட ஏ.ஆர்.ரகுமான்!.. ஷங்கர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!.. செம அப்டேட்!..
கவின் எடுத்துள்ள ஸ்டார் படத்துக்கு எதிராக வழக்குத் தொடரவும் காசு இல்லாத காரணத்தால் அந்த தயாரிப்பாளர் வழக்கும் தொடரவில்லை என்கிற திடுக்கிடும் தகவல்களை செய்யாறு பாலு தனது புதிய வீடியோவில் பேசியுள்ளார்.
இளன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் கவின், அதிதி போஹங்கர், லால் மற்றும் ப்ரித்தி முகுந்தன் நடிப்பில் உருவாகி உள்ள ஸ்டார் திரைப்படம் நாளை தியேட்டர்களில் வெளியாகிறது.
இதையும் படிங்க: யாஷின் படத்தில் நயன்தாரா!.. சம்பளம் இத்தனை கோடியா?!.. ரொம்ப ஓவராத்தான் போறீங்க!..



