நயன்தாராவுக்கு தலையில் இன்னாம்மா அடி விழுது!.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி!.. செம வீடியோ!..

Published on: May 12, 2024
---Advertisement---

அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை நயன்தாரா வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிக்கத் தொடங்கினார். ஹீரோக்களை விட இயக்குனர்கள் மீது அதிக ஈர்ப்பு கொண்டுள்ள நயன்தாரா வல்லவன் படத்தை சிம்பு இயக்கி நடித்த போது அவருடன் காதல் வலையில் விழுந்தார்.

அதேபோல விஜயுடன் வில்லு படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் பிரபுதேவாவுடன் காதல் வலையில் இருந்து டாட்டூ எல்லாம் குத்திக்கொண்டு திருமணம் வரை சென்ற நிலையில், பிரபுதேவாவின் முன்னாள் மனைவி கூட்டிய பஞ்சாயத்து காரணமாக அந்த திருமணம் நின்றது.

இதையும் படிங்க: சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழித்த வசனகர்த்தா… நடந்தது இதுதான்!..

நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வந்த நிலையில், சிம்புவை வைத்து போடா போடி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிக்க ஆரம்பித்தார்.

இந்த காதல் சில வருடங்கள் மட்டுமே நிற்கும் என ஏகப்பட்ட ட்ரோல்கள் கிளம்பிய நிலையில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் காதலித்து கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இதையும் படிங்க: சினிமாவே சத்திரம்னு வந்துட்டயா?… இயக்குனரை கலாய்த்த கவுண்டமணி.. நடந்தத் இதுதான்!..

திருமணம் முடிந்த நான்கு மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக வெளியான பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாடகைத்தாய் மூலமாக நயன்தாரா குழந்தை பெற்ற விவகாரம் வெளியே வந்தது. உயிர் மற்றும் உலகம் என பெயர் வைத்து அந்த இரண்டு ஆண் குழந்தைகளையும் நயன்தாரா வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை நயன்தாரா வெளியிட்ட வீடியோவில் ஒரு குழந்தை நயன்தாராவின் தோலில் அமர்ந்து கொண்டு அவரது தலையை மத்தளம் தட்டுவது போல தட்டி விளையாடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. காரில் செல்லும்போது இரண்டு குழந்தைகளுடன் நயன்தாரா கொஞ்சி விளையாடும் காட்சிகளையும் வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அந்த நடிகையுடன் லிவிங் டூகதரால்தான் பிரிந்தாரா கௌதமி?. கமலுடன் நடிக்க தயங்கிய நடிகைகள்… இதுதான் காரணமா?

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.