Connect with us

Cinema News

இந்த வருடம் அதிக வசூல் செய்த முதல் 10 படங்கள்… கவினிடம் பல்ப் வாங்கிய ரஜினிகாந்த்… அடங்கப்பா!

Kollywood: தமிழ் சினிமா கடந்த வருட முடிவில் வியாபாரம் மூவாயிரம் கோடியை தாண்டிய நிலையில் இந்த வருடம் அமோகமாக இருக்கும் என்றே நம்பப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த வருடத்தின் பாதி மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னமும் ஒரு பெரிய வெற்றிக்கு கோலிவுட் ஏங்கிக்கொண்டு இருப்பது தான் உண்மை.

இருந்தும் இந்த வருடம் ரிலீஸான திரைப்படங்களை போராடி ஓட்டியே திரையரங்குகள் கணிஷமான லாபம் அடைந்து இருக்கிறது. அந்த வகையில் இந்த வருடத்தின் முதல் பாதியில் அதிக வசூல் செய்த பத்து படங்கள் குறித்த ஆச்சரிய லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. முதலில் மலையாளத்தில் வெளியானாலும் தமிழ் சினிமாவை விட்டு வைக்காமல் கொடி கட்டி பறந்து பெரிய வசூல் குவித்த மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம்.

இதையும் படிங்க: இரண்டு ரசிகர்கள் எழுதிய கடிதம்!.. சிவாஜிக்கு நடிகர் திலகம் பட்டம் வந்தது இப்படித்தான்!..

கோடிக்கணக்கில் வசூல் செய்த நிலையில் தமிழிலும் அதிக வசூல் செய்த முதல் படமாக தான் இருக்கிறது. அயலான் மற்றும் கேப்டன் மில்லர். இந்த வருடத்தில் முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் வெளிவந்த படங்கள் இது தான். பொங்கல் தினத்தில் ரிலீஸான இப்படங்கள் பெரிய வசூல் செய்யவில்லை என்பது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட தியேட்டர் தரப்பே இந்த படங்களை தோல்வி படங்களாக தான் கருதுகிறது.

இருந்தும் மற்ற படங்கள் வெளிவராத நிலையில் இப்படங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்து இருக்கிறது.  நான்காவது இடத்தில் இருப்பது கடந்த வாரம் வெளிவந்த அரண்மணை4. இப்படம் திரில்லர் படம் என்பதாலும் பெரிய ஹிட் படங்களே இல்லாத நிலையில் இருந்த குறைகளை கூட கண்டுக்காமல் ரசிகர்களே இந்த படங்களை ஏத்துக்கொண்டனர். இப்படத்தினை தொடர்ந்து ஆச்சரிய எண்ட்ரியாக கில்லி ரீ ரிலீஸ் இடம்பெற்று இருக்கிறது.

இதையும் படிங்க: டைரக்டர் பிரச்னையே முடிஞ்சிதானு தெரியலை… தயாரிப்பாளரும் பிரச்னையா? தளபதி69ல் என்ன தான் நடக்குது?

20 வருடம் கழித்து ரிலீஸ் செய்யப்பட்ட இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அடுத்த இடத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ நடிப்பில் வெளிவந்த லால்சலாம். பெரிய ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இன்னமும் ஓடிடியில் கூட ரிலீஸ் செய்யப்படவில்லை. ரஜினிக்காக தேறிய வசூலால் ஆறாவது இடத்தில் இடம்பிடித்து இருக்கிறது. கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் திரைப்படம் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

இப்படத்தில் கவினின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வந்தாலும் இயக்குனர் மீது குறையை ரசிகர்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றனர். இன்னமும் திரையரங்கில் இருக்கும் இப்படம் லால்சலாமை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இடத்தில் விஷாலின் ரத்னம் திரைப்படமும், சின்ன பட்ஜெட் திரைப்படங்களான ப்ளூஸ்டார் மற்றும் லவர் திரைப்படங்களும் இடம் பெற்று இருக்கிறது. இதில் அரண்மணை4 இன்னமும் தியேட்டரில் இருப்பதால் லால் சலாம் மற்றும் அயலான் திரைப்படத்தின் வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரு பாடலில் பணிபுரிந்த நால்வருக்கும் டைவர்ஸ்… சூப்பர்ஹிட் பாட்டின் ஃபீல் பண்ண வைக்கும் ஒற்றுமை?!

google news
Continue Reading

More in Cinema News

To Top