ரஜினி பாட்டுக்கு டியூன் கேட்டா ராம்கி பட டியூனை கொடுத்த இளையராஜா! அப்புறம் என்னாச்சு தெரியுமா?

Published on: May 15, 2024
ramki
---Advertisement---

Actor Rajini: தமிழ் சினிமாவில் இசையில் மாபெரும் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. அவரைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்து வந்தாலும் இசையில் அவரை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அன்னக்கிளி படத்தில் தொடங்கி இன்றைய காலகட்டம் வரை அவருடைய இசை தமிழ் சினிமாவிற்கு ஒரு முக்கிய வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசை அமைத்துக் கொடுத்த இளையராஜா சூரி ஹீரோவாக நடித்த விடுதலை படத்திற்கும் அவர்தான் இசையமைத்து கொடுத்திருக்கிறார். அந்த அளவுக்கு இளையராஜாவின் இசை இல்லாமல் கோலிவுட் சினிமா இல்லை என்ற அளவிற்கு அவரின் புகழ் வளர்ந்துள்ளது. குறிப்பாக ரஜினி, கமல் இவர்களின் படங்களுக்கு பல நல்ல பாடல்களை கொடுத்ததன் மூலம் அவர்களின் படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது.

இதையும் படிங்க:கண்ட்ரோல் இருந்தா பாருங்க!… லாங் கவுனில் மொத்த அழகையும் காட்டும் ஷிவானி…

அதற்கு இளையராஜாவின் இசையும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த நிலையில் ரஜினியின் ஒரு படத்திற்கு டியூன் கேட்க அந்த டியூன் பிடிக்காமல் வேறொரு டியூன் கேட்ட இயக்குனர் அந்த டியூனை ராம்கி படத்திற்கு இளையராஜா கொடுத்த சம்பவம் பற்றிய செய்தி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

வீரா படத்தில் அமைந்த சூப்பர் ஹிட் பாடலான மலைக்கோயில் வாசலில் என்ற பாடல் situationக்கு இளையராஜா முதலில் போட்ட டியூன் ராம்கி நெப்போலியன் நடித்த வனஜா கிரிஜா படத்தில் வரும்  ‘முன்னம் செய்த தவம்’ என்ற பாடலின் டியூன் தானாம். ஆனால் சுரேஷ் கிருஷ்ணா இந்த டியூன் வேண்டாம். எனக்கு வேறொரு டியூன் போட்டு தாருங்கள் என்று கேட்ட பிறகு மலைக்கோயில் வாசலில் என்ற அந்த டியூனை போட்டுக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. அவர் போட்ட முன்னம் செய்த தவம் என்ற டியூனை வனஜா கிரிஜா படத்திற்காக இளையராஜா கொடுத்து விட்டாராம். இந்த செய்தி தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் இதான் முதல்முறை… இளையராஜா படத்தில் அந்த விஷயமே இல்லையாம்… சண்டைக்கு வராம இருந்தா சரி!…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.