Connect with us
AVM

Cinema News

ஃபுல் நைட் தூங்காம வேலை பார்த்த இசை அமைப்பாளர்!.. ஏ.வி.எம் லோகோ மியூசிக் உருவானது இப்படித்தான்!..

தமிழ்சினிமா உலகில் மட்டுமல்லாமல் இந்தியத் திரை உலகிலேயே மிகப்பெரும் சாதனைகளைப் படைத்த பட நிறுவனம் AVM . ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தான் இதன் நிறுவனர். இந்த நிறுவனத்தின் அதிபர்களுள் ஒருவரான ஏவிஎம் குமரன் தனது தந்தையைப் பற்றியும், அந்தக் கால திரையுலக அனுபவங்கள் குறித்தும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அப்பா மெய்யப்ப செட்டியார் முருக பக்தர். அதனால் தான் எங்களுக்கு எல்லாம் முருகனின் பெயரை வைத்துள்ளார். அவர் எடுத்த முதல் படம் ஸ்ரீவள்ளி. அது பிரகதி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது. சக்கை போடு போட்டது. இந்தப் பட ரிலீஸ் அன்று அவர் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று விட்டாராம். அங்கு சாமி தரிசனம் முடிந்து யானைக்கால் தடம் வழியாக இறங்கி வந்து கொண்டு இருந்தாராம். அப்போது மதுரையில் இருந்து மேனேஜர் கிருஷ்ணசாமி அய்யர் காரில் வந்து அப்பாவை சந்தித்து ‘படம் சூப்பர்ஹிட்’ என்று சொன்னாராம்.

இதையும் படிங்க… இரண்டு இயக்குனர்கள் மாறி!.. நம்பிக்கை இல்லாமல் ரஜினி நடித்த திரைப்படம்!.. அட அந்த சூப்பர் ஹிட் படமா?!..

2ம் உலகப்போரில் சென்னை ஹைகோர்ட்டில் எம்டன் பாம் வீசப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து படம் எடுக்க முடியாத சூழல். அதனால் காரைக்குடிக்கு அருகில் நாடகக் கொட்டகையை சோமநாத செட்டியார் போட்டுருந்தாரு. அவர் அதனால் நஷ்டம் அடைஞ்சிட்டாராம்.

உடனே அப்பா அதை மாசம் 3000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்தாராம். அங்கு எடுத்த படம் தான் நாம் இருவர். அந்த நேரம் பார்த்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கப் போகிறது என்ற செய்தி பரவியது. உடனே அப்பா பாரதியாரின் ‘வெற்றி எட்டு திக்கும் மட்டு கொட்டு முரசே’ என்ற பாடலை குமாரி கமலா ஆட டி.கே.பட்டம்மாள் பாட அவசரமாக உருவாக்கி விட்டாராம்.

அந்தப் படம் முடிந்ததும் மோனோகிராம் ரெடி பண்ண சென்னையில் இருந்து ஜி.எச்.ராவை வரச்சொல்லி ஏவிஎம் என்ற டைட்டிலுக்காக ஸ்கெட்ச் போட்டு மோனோகிராமை ரெடி பண்ணினாராம்.

Nam iruvar

Nam iruvar

அப்போது இசை அமைப்பாளர் R.சுதர்சனத்திடம் இதற்கு அவசரமாக இசை அமைக்கச் சொன்னாராம். சென்னைக்குப் போகக் கூடாது. இதற்காக ராத்திரி எல்லாம் தூங்காமல் இருந்தாராம். அப்போது அகில இந்திய வானொலி நிலையத்திற்கு ஒரு மியூசிக் வரும். அதைக் கேட்டதும் சுதர்சனம் ஆர்மோனியத்தில் பிராக்டிஸ் பண்ணினாராம்.

இது ஓகேன்னா இருக்குற மியூசிசியனை வைத்து நான் மியூசிக் போடுறேன் என்றாராம். அப்பாவும் ஓகே சொல்ல உடனே அந்த மியூசிக்கை ரெடி பண்ணினாராம். அதில் ஒரு முஸ்லிம் பிளேயர் கிளாரிநெட் வாசித்தாராம். அன்று ரெக்கார்ட் பண்ணியது தான் இன்று வரை அந்த மியூசிக் தான் வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top