Connect with us

Cinema News

அஜித் வீட்லயும் பார்ட்டி!.. குடிச்சிட்டு விஜய் பாட்டு பத்தி புலம்புனாரு!.. சுசித்ரா அட்டாக்!..

கமல்ஹாசன், விஜய், தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா, அனிருத், யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, சங்கீதா, கிரிஷ் என வரிசையாக பல தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றி அவதூறு கருத்துக்களை அடுக்கி வந்த பாடகி சுசித்ரா அடுத்ததாக இன்னொரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகர் அஜித் வீட்டில் நடந்த பார்ட்டி குறித்து பேசியுள்ளார்.

விஜய் வீட்டில் அடிக்கடி பார்ட்டி நடக்கும் என்றும் திரிஷா விஜய் வீட்டின் முன் நடனமாடியது ஒரு பார்ட்டியில் நடத்தப்பட்ட டேர் விளையாட்டின் போதுதான் என சுசித்ரா பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், தற்போது அஜித் வீட்டிலும் பார்ட்டி நடைபெற்றது அதிகாலை 5:00 மணிக்கு வரை அங்கே அந்தாக்ஷரி விளையாடினோம் என சுசித்ரா பேசியிருப்பது ரசிகர்களை மேலும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: கவினை நம்பி காசை கொட்டலாமா?.. ’ஸ்டார்’ பட சொதப்பலால் சுதாரித்துக் கொண்ட நெல்சன்!..

அஜித்குமார் மட்டுமின்றி ஷாருக்கான் வரை தனது வாய்க்கு வந்தபடி இந்திய சினிமாவில் உள்ள நடிகர்கள் அனைவரும் பார்ட்டி செய்தார்கள் என்றும் தான் அதில் கலந்து கொண்டு என்றும் சுசித்ரா யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்தால் வரும் வருமானத்துக்காக பேசி வருகிறார் என அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

சுசித்ரா தான் இந்த வாரம் யூடியூபர்களுக்கு சரியான தீனி போட்டு வருகி்றார் என்றும் விரைவில் இதற்காக பெரிய அளவில் சிக்கித் தவிக்க போகிறார். அப்படி தவித்தாலும் தனக்கு மனநலம் சரியில்லை என எஸ்கேப் ஆகி விடுவார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மத்தவங்க பேசட்டும்!.. எனக்கு வேலை இருக்கு!.. இளையராஜா வெளியிட்ட வீடியோ…

நடிகர் அஜித் வீட்டில் நடைபெற்ற பார்ட்டியில் அதிக அளவிலான சரக்குகள் இருந்ததாகவும் நல்லா குடித்துவிட்டு விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற “சின்ன தாமரை” பாடல் மீது தனக்கு பொறாமை என அஜித் தன்னிடம் கூறியதாக சுசித்ரா பேசிய வீடியோவை தற்போது விஜய ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top