Cinema News
விடாமுயற்சிக்கு பிறந்தது விடிவுகாலம்.. டபுள் ட்ரீட் வைத்த அஜித்.. தல ஃபேன்ஸ் ரெடியா இருங்க!..
Actor Ajith: கோலிவுட்டில் ஒரு பெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அஜித்தின் படங்கள் ஒன்றும் ரிலீஸ் ஆகவில்லை. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகியும் இன்னும் அவருடைய எந்த படங்களும் வெளியாகவில்லை. அதேசமயம் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தை ஆரம்பித்த படக்குழு அந்த படத்தின் ஆரம்பத்திலேயே பல பிரச்சனைகளை சந்தித்து வாழ்வா சாவா என்ற நிலைமையில் இன்று வரை இருந்து வருகிறது.
இதற்கிடையில் லைக்காவின் பொருளாதார நெருக்கடியும் இந்த படத்திற்கு பெரும் தடையாக அமைந்தது. இந்த நிலையில் அஜீத் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைந்திருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் ஆரம்பமானது. விடாமுயற்சி படத்தைவிட குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: திருமணத்திற்கு பின் அப்பா – அம்மாவை ஒதுக்கிய தனுஷ்!.. ஐஸ்வர்யாதான் காரணமா?!..
ஏனெனில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியே இதற்கு காரணமாகும். அதே நேரம் அஜித்தின் தீவிர ரசிகராகவும் இருப்பவர் ஆதிக். அதனால் அஜித்தை எந்த மாதிரியான கோணத்தில் காட்டப் போகிறார் என்ற ஒரு ஆர்வம் ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இடையில் தெலுங்கானா தேர்தல் நடைபெற்றது. அதனால் இரண்டு நாட்கள் மட்டும் படப்பிடிப்பை நடத்திவிட்டு அதன் பிறகு விடுமுறை அளித்தனர். பிறகு இப்போது படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஜூன் ஏழாம் தேதி வரை குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெறப் போவதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இதையும் படிங்க: எனக்கு ராஜாவா தான் வாழுறேன்… மொத்த தென்னிந்திய சினிமாவை கட்டிப்போட்ட அனிருத்… செமையா இருக்கே!
ஆனால் ஜூன்7ஆம் தேதிக்கு பிறகு அஜித் விடாமுயற்சி படத்தை மீண்டும் தொடங்க சொன்னதாகவும் அந்த படத்தை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற குறிக்கோளிலும் இருக்கிறாராம். அதனால் ஜூன் ஏழுக்கு பிறகு விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு மீண்டும் குட் பேட் அக்லீ திரைப்படத்தில் இணைய போகிறார் அஜித் என்ற ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதனால் இந்த வருடம் கண்டிப்பாக இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.