60களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன் என பலரிடமும் உதவியாளராக இருந்து இசையை கற்றுக்கொண்டவர். அவர்களிடம் சேருவதற்கு முன் ஒரு தியேட்டரில் திண் பண்டங்களை விற்கும் வேலையை செய்து வந்தார் எம்.எஸ்.வி என்பது பலருக்கும் தெரியாது.
பாலக்காட்டில் பிறந்தவர் இவர். அவருக்கு 4 வயது இருக்கும்போது அவரின் தந்த இறந்துவிட்டார். ஏழ்மையான குடும்பத்தில் வசித்து வந்த எம்.எஸ்.வி தியேட்டரில் வேலை பார்க்கும்போது படங்களில் வரும் பாடல்களின் மீது அதிக ஆர்வம் கொண்டார். இசை அவரை அதன்பக்கம் இழுத்தது.
இதையும் படிங்க: சிவாஜிக்கு எம்.ஜி.ஆர் குரலில் பாடிய டி.எம்.எஸ்!.. இப்படி எல்லாம் கூட நடந்திருக்கா..?!
எனவே, அப்போது திரைப்படங்களை தயாரித்து வந்த பிரபலமான ஜூபிடர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன்பின் இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக சேர்ந்தார். ஒருகட்டத்தில் தனியாக இசையமைக்க துவங்கி 60களில் ரம்மியமான மெலடி மற்றும் மெல்லிசை பாடல்களை கொடுத்தார் எம்.எஸ்.வி. எம்.ஜி.ஆர் சிவாஜி முதல் பல நடிகர்களுக்கும் பெரும்பாலும் இசையமைத்தவர் இவர்தான்.
இளையராஜாவுக்கு முன்னோடியாக இருந்தவர். பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் உருவான பல படங்களுக்கு அற்புதமான பாடல்களை எம்.எஸ்.வி கொடுத்தார். கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் என பல படங்களை உதாரணமாக சொல்ல முடியும்.
பி.ஆர்.பந்துலு இயக்குனர் மட்டுமல்ல அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. அவர் இயக்கிய பெரும்பாலான படங்களை தயாரித்ததும் அவரேதான். ஒருமுறை ஒரு படத்திற்காக எம்.எஸ்.வியை ஒப்பந்தம் செய்தார் பந்துலு. ஆனால், 3 மாதம் ஆகியும் பாடல்களை உருவாக்க அவரை பந்துலு அழைக்கவில்லை.
இதையும் படிங்க: இப்படிப்பட்டவரா எம்.ஜி.ஆர்?!.. சோ-வை மிரள வைத்த இரண்டு விஷயங்கள்!.. அட செமயா இருக்கே!..
எனவே, பந்துலுவின் உதவியாளரிடம் அதுபற்றி எம்.எஸ்.வி விசாரிக்க பந்துலு இப்போது நிதிநெருக்கடியில் சிக்கி இருக்கிறார். நீங்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார். உங்களுக்கு குறைவான சம்பளத்தை கொடுக்கவும் அவர் யோசிக்கிறார் என சொல்ல எம்.எஸ்.விக்கு புரிந்துவிட்டது. அடுத்த சில நிமிடங்களில் பந்துலுவின் வீட்டில் இருந்தார் எம்.எஸ்.வி.
‘இந்த படத்தின் கதைக்கு நான் தேவையில்லை என நீங்கள் நினைத்தால் இந்த படத்திலிருந்து நான் விலகி விடுகிறேன். ஆனால், எனக்கு சம்பளம் கொடுக்க முடியாது என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் ஒப்பக்கொள்ள மாட்டேன். எனக்கு நீங்கள் எந்த சம்பளமும் கொடுக்க வேண்டாம். நான் இந்த படத்திற்கு இசையமைக்கிறேன்’ என சொனனார் எம்.எஸ்.வி. அவர் அப்படி சொன்னதும் நெகிழ்ந்து போனார் பி.ஆர்.பந்துலு.
இதுபோன்ற மனிதர்கள் சினிமா உலகில் இப்போது பார்க்க முடியுமா?..
