Cinema History
கலைவாணருக்கும், எம்ஆர்.ராதாவுக்கும் உள்ள அந்த ஒற்றுமையை… அட ஆமா!.. இப்பதான் தெரியுது!
தமிழ்த்திரை உலகில் வில்லன் நடிகர்களில் ரொம்பவே வித்தியாசமானவர் எம்.ஆர்.ராதா. குரல் மாடுலேஷனில் அசத்துபவர். ஒரே டயலாக்கை 3 விதமான குரல்களில் பேசி விடுவார். அதனால் தான் பல மேடைகளில் இன்றும் இவரைப் போல மிமிக்ரி கலைஞர்கள் பேசி அப்ளாஸ் அள்ளுகின்றனர்.
அதே போல எந்த ஒரு விஷயத்தையும் தைரியமாகப் பேசும் ஆற்றல் கொண்டவர். மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவார். அது யாராக இருந்தாலும் சரி. அந்த வகையில் அவருக்கும், கலைவாணருக்கும் உள்ள ஒரு சுவாரசியமான ஒற்றுமை குறித்து நடிகர் ராஜேஷ் இப்படி சொல்லி இருக்கிறார். வாங்க பார்க்கலாம்.
இதையும் படிங்க... மக்கள் நாயகனின் ‘சாமானியன்’ இதைத்தான் சொல்லுது!.. படம் பார்த்து விட்டு லியோனி கொடுத்த பேட்டி
எம்.ஆர்.ராதாவைப் பற்றி நடிகர் ராஜேஷ் ஒருமுறை அவரது மகன் ராதாரவியிடம் கலந்து பேட்டி எடுத்தார். அப்போது இருவருமே சுவையான சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது ராஜேஷ் இப்படி பேசினார்.
எம்.ஆர்.ராதா பயங்கரமான தைரியசாலி அதுல எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்கிறார் ராஜேஷ். ஏன்னா எவ்வளவு பெரிய ஆபீசர் வந்தாலும் அப்படியே தான் உட்கார்ந்திருப்பாராம். எந்திரிச்சி போய் கூழைக் கும்பிடு எல்லாம் போட மாட்டாராம். நடிகர் தியாகு கூட சொல்வாராம்.
அதே மாதிரி சைலண்ட் மூவி பற்றியும் ராஜேஷ் சொன்னார். இந்த விஷயத்துல ரெண்டு பேரைச் சொல்லலாம். ஒண்ணு எம்.ஆர்.ராதா. இன்னொன்னு கலைவாணர். சைலண்ட் மூவில பிசிக்கல் எமோஷன் அதிகமா இருக்கும். வெர்பல் கிடையாது. ராதா அண்ணன் பேசும்போது, தலையை முதலில் சைகையால் ஆட்டிவிட்டு, ‘நான் வரமாட்டேன்’னு சொல்வாரு.
இதையும் படிங்க… விஜய்க்கு மிகவும் பிடித்த திரைப்படம்! பாத்துட்டு மனுஷன் இப்படிலாம் பண்ணுவாரா?
அதே மாதிரி கலைவாணர் தலையையும், கையையும் சைகையால் காட்டி விட்டு, ‘எனக்குத் தெரியும். நீ நல்லவன்னு’ திரும்பவும் சைகையுடன் சேர்த்து வசனம் பேசுவார். இதுல முதல்ல ஆக்ஷன் வரும். அப்பறம் டயலாக் வரும். டாக்கி வரும் போது தான் எம்ஜிஆர், சிவாஜி வந்தாங்க. அவங்ககிட்ட அந்தப் பாதிப்பு இருக்காது.கலைவாணர்கிட்டயும், ராதா அண்ணனிடமும் அதை நான் பார்த்தேன். அதை யாராலும் கண்டுபிடிக்க முடியல. அது அவங்களுக்கு பிளஸா ஆயிடுச்சு. என்று சொல்ல ராதாரவி சிரிக்கிறார்.