விஜயகாந்திடம் திமிராக பேசிய தயாரிப்பாளர்! பதிலுக்கு கேப்டன் கொடுத்த கௌரவம் என்ன தெரியுமா?

Published on: May 26, 2024
viji
---Advertisement---

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்கு பேர் போன நடிகர் விஜயகாந்த். யாரிடமும் பொய்யாக பழக மாட்டார். மதுரையில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து வந்ததனால் எதையும் எதார்த்தமாக பேசக் கூடியவர். அனைவரிடமும் மிகவும் இயல்பாக பழகக் கூடியவர். இப்படி விஜயகாந்தை பற்றி அனைவரும் சொல்லும் விஷயம் இதுதான். அவரைப் பற்றி இதுவரை யாரும் தவறாக பேசியதே இல்லை. அவரை எதிர்த்துப் பேசியவர்களும் இந்த தமிழ் சினிமாவில் இல்லை.

ஆனால் ஒரே ஒரு தயாரிப்பாளர் விஜயகாந்திடம் கோபப்பட்டு அதை விஜயகாந்தே மிகவும் ஆச்சரியமாக பார்த்த சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. பிரபல சினிமா தயாரிப்பாளரும் செவன்த் சேனல் நிறுவனருமான மாணிக்கம் நாராயணன் விஜயகாந்த்திடம் தனக்கு இருந்த அனுபவத்தை பற்றி கூறியிருக்கிறார். விஜயகாந்தை வைத்து எப்படியாவது ஒரு படம் பண்ண வேண்டும் என பலமுறை அவரை சந்தித்து பேசி இருக்கிறாராம்.

இதையும் படிங்க: கலைவாணருக்கும், எம்ஆர்.ராதாவுக்கும் உள்ள அந்த ஒற்றுமையை… அட ஆமா!.. இப்பதான் தெரியுது!

ஆனால் விஜயகாந்த் அவருக்கு சரியான பதில் சொல்லவே இல்லையாம். உடனே கோபப்பட்ட மாணிக்கம் நாராயணன் விஜயகாந்த் முகத்திற்கு எதிராகவே  ‘நானும் எவ்வளவு முறை உங்களை வந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒன்னு பண்ணுவோம் என்று சொல்லுங்கள். இல்லை வேண்டாம் என்று சொல்லுங்கள். இப்படி அலைய வைக்காதீர்கள்’ என படக்கென பேசிவிட்டு சென்றாராம். இதை விஜயகாந்த் மாணிக்கம் நாராயணனுக்கு நெருங்கிய நண்பர் ஒருவரிடம்  ‘என்ன இந்த ஆளு இப்படி பேசுகிறார்? இவ்வளவு கோபப்படுகிறார்’ என்று கூறினாராம்.

இது ஒரு புறம் இருக்க ரம்பா, லைலா. ஜோதிகா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் த்ரீ ரோசஸ். அந்த படத்தை ரம்பாவின் சகோதரர் தான் எடுத்திருந்தார். அப்போது அந்தப் படத்திற்காக ஃபைனான்சியர்களிடம் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டிருந்ததாம். அதனால் இந்த பிரச்சனை மாணிக்கம் நாராயணன் அவருக்கு தெரிய வர இவர் தான் பணம் கொடுத்தாராம்.

இதையும் படிங்க: அனிருத் இசைக்கு கிட்டக்கூட வரலையே!.. தனுஷிடம் சிக்கிய ஏ.ஆர். ரஹ்மான்.. ஒரே அசிங்கமா போச்சு குமாரு!..

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு ஜோதிகாவிற்கு சம்பள பாக்கியாக மூன்றிலிருந்து ஏழு லட்சம் கொடுக்க வேண்டியதாக இருந்ததாம். அப்படி கொடுத்தால் தான் படம் ரிலீஸ் ஆகும் என்ற நிலையில் இருக்க மாணிக்கம் நாராயணனிடம் அப்போதைக்கு பணம் எதுவும் இல்லை. அதனால் செக்காக கொடுத்திருக்கிறார் மாணிக்கம் நாராயணன். அதுவும் ஜோதிகாவின் மேனேஜராக இருந்த தங்கதுரை இடம் கொடுத்திருக்கிறார்.

ஆனால் அவர் நேரடியாக கொடுக்கவில்லையாம். அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் இடம் அந்த செக்கை கொடுத்து விஜயகாந்த் தங்கதுரையை அழைத்து அந்த செக்கை கொடுத்தாராம். அதற்கு தங்கதுரை  ‘இது என்ன செக்காக தருகிறீர்கள்’ என கேட்டிருக்கிறார். அதற்கு விஜயகாந்த்  ‘மாணிக்கம் நாராயணணன் யார் தெரியும்ல? தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி அவர் ஒரு ரிசர்வ் பேங்க். சொன்ன தேதியில் பணம் வந்து சேரும். அவரை நம்பு’ என கூறி அந்த செக்கை கொடுத்தாராம். இதைப்பற்றி பேசிய மாணிக்கம் நாராயணன் விஜயகாந்த் எனக்கு அன்று கொடுத்த ஒரு கவுரவம் தான் அது என கூறினார்.

இதையும் படிங்க: அந்த விஷயத்துக்கு காசை கறக்கும் கவுண்டமணி! ரம்பாவுக்கும் காசு கொடுத்தாரா? இது என்ன புதுசா இருக்கு?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.