Connect with us

Cinema News

கோட் படத்தில் இப்படி ஒரு காட்சியா?!. சும்மா விசில் பறக்கப்போகுது!. வெறித்தனம் காட்டிய வெங்கட்பிரபு!..

GOAT Movie: விஜய் இப்போது நடித்து வரும் கோட் படத்தின் ஒரு காட்சி பற்றி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். வசூல் சக்கரவர்த்தியாக இன்று அவருடைய படங்களுக்கு நல்ல ஒரு ஓபனிங் இருந்து வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் இணைந்து லைலா பிரசாந்த் பிரபுதேவா அஜ்மல் மற்றும் மோகன் பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள் .இதில் மோகன் விஜய்க்கு வில்லன் என ஒரு செய்தி வெளியானது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி விஜய்க்கு வில்லன் விஜய் தான் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: விஜயை ஓவர் டேக் செய்து மாஸ் காட்டிய லாரன்ஸ்! கமுக்கமா இருந்து தூள் கிளப்பிட்டாரே

மோகனின் கதாபாத்திரம் குறித்து இன்னும் சரியான ஒரு அறிவிப்பு வெளியாகவில்லை. அதாவது கோட் படத்தின் ஒரு சில காட்சிகள் திருவனந்தபுரத்தில் எடுக்கப்பட்டது. அந்த இடத்தில் ஏதோ ஒரு பாம் வைக்க அதை ஒரு விஜய் செயலிழக்க வைப்பதும் அதை எதிர்த்து இன்னொரு விஜய் சண்டையிடுவதுமாக இந்த காட்சி எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இன்னும் சொல்லப்போனால் அப்பா விஜய்க்கும் மகன் விஜய்க்கும் இடையே தான் இந்த சண்டை என சொல்லப்படுகிறது. இதற்காகத்தான் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை சென்று உயர்தர தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த காட்சியை பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.அந்தளவுக்கு இரு விஜயும் மோதும் காட்சியை தத்ரூபமாக எடுத்திருப்பார்களாம்.

இப்படி இருக்க மோகனின் கதாபாத்திரம் விஜய்க்கு வில்லனா என்ன என்பது பற்றி இன்னும் சரியாக தெரியவில்லை. மேலும் இதைப் பற்றி கோடம்பாக்கத்தில் உள்ள சில பிரபலங்கள்  விஜய் என்பவர் ஒரு பெரிய மாஸ் நடிகராக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: பாண்டியராஜன்கிட்ட அசிஸ்டண்டா சேர வந்த ரமேஷ் கண்ணா… எத்தனை சலாம் போட்டும் பிரயோஜனமே இல்லையே…?!

இப்படி இரண்டு விஜய் சண்டை போடும்போது ரசிகர்கள் அதை கொண்டாடுவார்களா இல்லை எதிர்ப்பார்களா. அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை பற்றி பேசி வருகிறார்கள். ஆனால் இப்படி ஒரே நடிகர் இரு வேடங்களில் ஹீரோ வில்லனாக நடித்த பல திரைப்படங்கள் இதற்கு முன் வெளியாகியிருக்கின்றன.

உதாரணமாக வரலாறு, இந்தியன், விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் போன்ற பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதனால் இந்த கோட் திரைப்படம் எப்படி ரசிகர்களை சென்றடைகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top