Connect with us

latest news

டிடிஎஃப் வாசனை 100 நாள் வெளியே விடாமல் லாக் பண்ண போறாங்களாம்!.. சிறுத்தை சிக்குமா?..

விதவிதமான உயர்ரக பைக்குகளை வாங்கி வைத்துக்கொண்டு அதிவேகமாக சென்று அலப்பறை செய்து ஏகப்பட்ட இளைஞர்களை யூடியூப் சேனல் வீடியோ மூலமாகவே ரசிகர்களாக மாற்றியுள்ளார் டிடிஎஃப் வாசன்.

இளைஞர்களை தவறாக வழிநடத்தி வருகிறார் என அவர் மீது குற்றங்கள் வரிசையாக சுமத்தப்பட்டு வந்த நிலையில் மஞ்சள் வீரன் எனும் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறேன் என தனது ரூட்டை திருப்பினார். ஆனால், அவரது போதாத காலம் சென்னை டு பெங்களூர் செல்லும் சாலையில் அதிவேகமாக பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவருக்கு கையில் அடிபட்டது.

இதையும் படிங்க: பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு!.. லவ்வருடன் எடுத்த வீடியோவை வெளியிட்ட அம்மு அபிராமி!..

மேலும், ஆபத்தான முறையில் வண்டி ஓட்டுகிறார் என அவர் மீது வழக்கு தொடரப்பட்டு லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனாலும், சேட்டை பிடிச்ச டிடிஎஃப் வாசன் காரில் செல்கிறேன் என அங்கேயும் வாகனத்தை கவனமாக ஓட்டமால் வீடியோ போட்டுக் கொண்டே ஓட்டியது அவர் மீது இன்னொரு வழக்கையும் போட வழிவகை செய்தது.

சில நாட்கள் சிறைவாசம் சென்று வந்த டிடிஎஃப் வாசனை ஒரேயடியாக 100 நாட்களுக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் சிறைபிடிக்க விஜய் டிவி தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய நபர்களை பிக் பாஸ் பிரபலங்களாக விஜய் டிவி மாற்றி வரும் நிலையில், அந்த வரிசையில் டிடிஎஃப் வாசனையும் பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சுகன்யா செஞ்சதை யாரும் செய்ய முடியாது! சைடு ஆக்டர் கூட இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க..

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், இந்த முறையும் ஏகப்பட்ட சர்ச்சை போட்டியாளர்களை களம் இறக்கும் முடிவில் பிக் பாஸ் குழு செயல்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே டிடிஎஃப் வாசனின் காதலியான ஷாலின் ஜோயாவை விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக களம் இறக்கி உள்ளனர்.

இந்நிலையில், அந்த நிகழ்ச்சி முடிந்ததும் டிடிஎஃப் வாசன் மற்றும் ஷாலின் ஜோயா இருவரையும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். மேலும், பல இளைஞர்களை நேரடியாக கெடுக்க டிடிஎஃப் வாசனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பை அவர் மிஸ் செய்வாரா என்ன? என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: உதட்டுல ஸ்ட்ரா போட்டு உறிஞ்சவருக்கு உலகளவில் அங்கீகாரம்!.. ஒரே ஒரு போஸ்ட்.. ஓஹோன்னு வாழ்க்கை!..

google news
Continue Reading

More in latest news

To Top