Connect with us
SS

Cinema News

சிம்ரன் உனக்கு ஜோடியா..? கேலி செய்த பசங்க முன்னாடி கெத்து காட்டிய சூர்யா

தமிழ்சினிமா உலகில் கேரக்டருக்காக உடலை வருத்தி நடித்து பெயர் வாங்கும் நடிகர்கள் வெகு சிலர் தான் உண்டு. அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். கமல், விக்ரம் என்று வரும் இந்த வரிசையில் அடுத்ததாக இடம்பெறுபவர் நடிகர் சூர்யா. இவர் நடித்து வரும் படங்களில் கேரக்டருக்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் மல்லுக்கட்டியாவது செய்து விடுவார்.

பேரழகன் படத்தில் கூனனாக நடித்து அசத்தியிருப்பார். பிதாமகன் படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து வித்தியாசமான தோற்றத்தில் நடித்து இருப்பார். ஏழாம் அறிவு படத்தில் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் வந்து அசத்துவார்.

இதையும் படிங்க… பாறை மீது பப்பரப்பான்னு போஸ் கொடுத்த பவித்ரா லட்சுமி!.. புதுசா ஏதும் பட வாய்ப்பே கிடைக்கலையாம்மா!..

கஜினி படத்திலும் இவர் மொட்டை போட்டுக்கொண்டு மிரட்டியிருப்பார். அடுத்தடுத்த படங்களிலும் இவர் கேரக்டரைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் வரப்போகும் கங்குவா படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

இவர் சினிமாவிற்குள் நுழையும் முன் அம்பத்தூரில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தாராம். அப்போது இடையிடையே சினிமா வாய்ப்புகளையும் தேடி அலைந்துள்ளார். அந்த நேரம் தான் இவருக்கு நேருக்கு நேர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம்.

அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பதாகவும் சொல்ல, இந்த விஷயத்தை தன் சக பணியாளர்களிடம் சந்தோஷமாக பகிர்ந்தாராம். உடனே உனக்கு சிம்ரன் ஜோடியா? என அவர்கள் கிண்டல் செய்தார்களாம்.

இதையும் படிங்க… பெண்களை சுண்டி இழுக்கும் அது இவருக்கு மட்டும் பிடிக்காதாம்..! இப்படியும் ஒரு நடிகையா..?

அதன்பிறகு தான் நான் பிரபல நடிகர் சிவகுமாரின் மகன் என்றும் இதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று தந்தை கேட்டுக்கொண்டதால் இத்தனை நாள்களாக உங்களிடம் மறைத்து விட்டேன் என்ற ரகசியத்தையும் சூர்யா சொன்னாராம். அதன்பிறகு கிண்டல் செய்தவர்கள் வாயடைத்துப் போய் சூர்யாவை அண்ணாந்து பார்க்க ஆரம்பித்தார்களாம். இப்படித்தான் சூர்யாவுக்கு முதல் பட வாய்ப்பு வந்தது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top