Connect with us
VJS

Cinema News

என்னது! மகாராஜா படம் விஜய் சேதுபதிக்காக எழுதலயா? டைரக்டரே சொல்லிட்டாரே!

விஜய் சேதுபதியின் 50 வது படமாக வெளியான மகாராஜா சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விட்டது. படத்தின் எந்த ஒரு காட்சியும் யூகிக்க முடியாதவாறு இருந்தன. படத்தில் ஏகப்பட்ட திருப்புமுனைக் காட்சிகள். திரைக்கதை அருமையாக இருந்தது. விஜய் சேதுபதியின் நடிப்பும் செமயாக இருந்தது என்று ரசிகர்கள் தங்களின் விமர்சனத்தைத் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் அந்தப் படத்தைப் பற்றி ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இதுகுறித்து என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…

இதையும் படிங்க… இந்த பாட்டாவது தேறுமா?!.. வெளியானது கோட் பட செகண்ட் சிங்கிள் அப்டேட்!..

விஜய் சேதுபதிக்காக நான் இந்தப் படத்துக்குக் கதை எழுதல. நான் முதல்ல கதையை எழுதிட்டேன். 45 சதவீதம் எழுதும்போதே நமக்குத் தெரியும். இந்தக் கேரக்டரை இவர் பண்ணுனா நல்லாருக்கும்னு. அப்படித்தான் வந்தது. அப்புறம் விஜய் சேதுபதி வரும்போது அவருக்காக கொஞ்சம் மாத்திக்கிட்டேன்.

நான் ஒரு தொகையை வாங்கிக்கிட்டு ஸ்கிரிப்ட் எழுத மாட்டேன். அதே மாதிரி ஓட்டல்ல ரூம் போட்டு எல்லாம் நான் கதை எழுதுறேன்னு தயாரிப்பாளருக்கு செலவு கொடுக்க மாட்டேன். நான் திருப்தி அடையற வரை கதையை எழுதிட்டு அதுக்கான அமௌண்ட்ட வாங்குவேன். எனக்கு எப்போதாவது சின்ன ஐடியா கிடைச்சாலும் அதை மொபைல்ல நோட் பண்ணி வச்சிக்குவேன். டிரெய்லர் தான் படத்தோட ளமையக்கருவா இருக்கும்.

எனக்கு ஒரு பர்சன்ட் கூட இந்தப் படத்தைப் பத்தின டவுட் இல்ல. படம் பார்க்க வருபவன் முட்டாள் இல்ல. என் படத்தையும் நிறைய பேரு பார்க்கணும்னு நான் நினைப்பேன். அதனால அவனுக்கான அவன் அறிவாளி. அவனும் என் படம் பார்ப்பான். என் கதைக்குள்ள வருவான். படம் முடிஞ்சி போகும்போது எமோஷனலா போவான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க… கள்ளக்குறிச்சி விவகாரம்!.. சூர்யாவை பங்கம் செய்த புளூசட்டை மாறன்!.. அதுக்குன்னு இப்படியா!..

ஆரம்பத்தில் குறும்படம் எடுத்து கமலிடம் பாராட்டு பெற்றவர் இயக்குனர் நித்திலன் சுவாமி நாதன். இவர் கமலின் பல படங்களால் ஈர்க்கப்பட்டு சினிமாவுக்கு வந்தவர். அதே நேரம் விஜயகாந்த் நடித்த ஏழைஜாதி, கோவில் காளை, கேப்டன் பிரபாகரன் படங்களை எல்லாம் 100 தடவை பார்த்திருப்பதாகவும் பேட்டியில் தெரிவித்து இருந்தது ஆச்சிரியப்படுத்தியது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top