Connect with us

Bigg Boss

அக்கா இப்போதான் வந்துருக்காரு.. கமலை முடிச்சிவிட்டது பத்தலையா? கலாய் வாங்கும் பிக்பாஸ் பிரபலம்

BiggbossTamil: தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விரைவில் தொடங்கியிருக்கும் நிலையில் அதன் புரோமோ நேற்று வெளியிடப்பட்டது. அதிலிருந்து பஞ்சாயத்தை ரசிகர்கள் கூட்டி விட்டனர்.

ஹிந்தியில் பிரபலமாக இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழுக்கு எடுத்து வர டிவி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் அந்த  நிகழ்ச்சியை மக்களுக்கு சரியாக கொண்டு போக பிரபல முகம்தான் தேவைப்பட்டது. அதற்காக அணுகப்பட்டவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன்.

இதையும் படிங்க: சினேகா ரோலில் முதலில் செலக்ட் ஆனவர் நயன்! படத்தை பார்த்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா?

அவரும் சரியாக அதை பயன்படுத்திக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழு சீசன்களை வரிசையாக தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் கடந்த சீசனில் அவருக்கு ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்பு உருவாகியது. பிரபலங்களே அவரை கலாய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அவருடைய சமூக வலைதள பக்கங்கள் ரசிகர்களின் நெகட்டிவ் கமெண்டுகளால் குவிந்தது. அவர் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இதனால் அவர் நிகழ்ச்சியிலேயே தான் செயல்பட்டது சரிதான் என பொங்கி தீர்த்தார். இந்த மனக்கசப்பே அவர் இந்த சீசனை தொகுத்து வழங்காமல் வெளியேறியதாக தகவல்கள் கசிந்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தற்போது தொகுத்து வழங்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அவரின் முதல் அறிமுக புரோமோ வெளியிடப்பட்ட நிலையில் நிகழ்ச்சிக்கான முதல் அதிரடி புரோமோ நேற்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இவ்வளவுதானா?!… அதிர்ச்சி கொடுக்கும் கோட் படத்தின் வசூல்!..

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் கடந்த சீசன் போட்டியாளரான மாயகிருஷ்ணன் அதை பகிர்ந்து என்னுடைய மக்கள் செல்வன் எனப் பாராட்டி பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பொங்கி தீர்த்தனர். ஏழு சீசனா தொகுத்து வழங்கினவர துரத்திவிட்டது பத்தலையா?

இப்பதான் வந்திருக்காரு அவரயாச்சும் விட்டு வைக்கலாம் இல்லையா என மாயாவை கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். தொடர்ந்து இந்த புரோமோவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தாலும் பழைய பிக் பாஸ் போட்டியாளர்களால் இப்படி விமர்சனங்களும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மாயா ட்வீட்டைக் காண: https://x.com/maya_skrishnan/status/1833905094775247175

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Bigg Boss

To Top