Connect with us
sasikumar

Cinema News

விக்ரமுடன் பல கெட்டப்புகளில் நடித்த சசிக்குமார்!.. அட யாருக்கும் தெரியாம போச்சே!…

சுப்பிரமணியபுரம் திரைப்படம் மூலம் சினிமா உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் சசிக்குமார். மதுரை பின்னணியில் 80களில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டிருந்த இப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார் சசிக்குமார். 80களில் இளைஞர்களிடம் இருந்த காதல், நட்புக்காக பிரச்சனையில் சிக்கி வாழ்க்கை தடம் மாறி அது எங்கே போய் முடிகிறது என்பதை அதிரும்படி காட்டியிருந்தார்.

நட்பு என்றாலே தெய்வீகம், நட்புக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிவார்கள், நட்புக்காக எதுவும் செய்வர்கள், நட்பின் பெருமை என தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காட்டப்பட்டு வந்த ஃபார்முலாவை உடைத்து நட்பு துரோகமும் செய்யும் என முகத்தில் அடித்தது போல் காட்டியிருந்தார் சசிக்குமார்.

இதையும் படிங்க: அடுத்த ஒரு ஷாம்பூ டப்பாவ ரெடி பண்ணும் வைரமுத்து! சுசித்ரா சொன்னது சரிதான்

பாலிவுட்டின் சிறந்த இயக்குனராக இருக்கும் அனுராக் காஷ்யப் இப்படத்தை பார்த்துவிட்டு சென்னை வந்து சசிக்குமாரை நேரில் சந்தித்து பாராட்டிவிட்டு போனார். அதன்பின் முழுநேர நடிகராக மாறினார் சசிக்குமார். இவரை பிடிக்காத ரசிகர்கள் என இப்போது யாரும் இல்லை. இவர் நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் மனிதநேயம் பற்றி பேசியது.

சினிமாதான் வாழ்க்கை என முடிவெடுத்த சசிக்குமார் இயக்குனர் பாலாவிடம் உதவியாளராக இருந்தவர். பாலா இயக்கிய சேது, நந்தா ஆகிய 2 படங்களிலும் சசிக்குமார் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சசிக்குமார் சேதுபடம் பற்றி பல தகவல்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

sasi_main_cine

sasikumar

கல்லூரி முடித்தவுடன் சேது படத்தில் வேலை செய்ய வந்துவிட்டேன். அந்த படத்தில் பல காட்சிகள் நான் நடித்திருக்கிறேன். கான கருங்குயிலே பாடலில் ஆடிக்கொண்டிருப்பேன். அதேபோல், எங்கே செல்லும் இந்த பாதை பாடலில் விக்ரமை போல எனக்கும் மொட்டையடித்து உட்கார வைத்துவிட்டார்கள். இன்னொரு பாடலிலும் நான் இருப்பேன்.

அந்த படத்தில் விக்ரம் மட்டுமல்ல. நானும் பல கெட்டப்புகளில் நடித்திருக்கிறேன். விக்ரம் போல மொட்டை போட்டு நடித்தபோது அதே கெட்டப்பில் நடித்த யாரும் என் பேச்சை கேட்கவில்லை. ‘நீயும் எங்கள மாதிரி நடிக்க வந்தவன்தான போடா’ என்றார்கள். அதன்பின் கிளாப் போர்ட்டை கையில் பிடித்துக்கொண்டே எல்லோரையும் அடக்கி நடிக்க வைத்தேன்’ என சிரித்துக்கொண்டே சொன்னார் சசிக்குமார்.

இதையும் படிங்க: மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதில் நடிக்கவேண்டியது அவர்தான்!.. எப்படி மிஸ் ஆச்சி!..

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top