Connect with us
madhu

Cinema News

கோலிவுட்டின் முதல் ஹீரோ அஜித்தான்! மதுபாலா சொன்ன விஷயம் என்ன தெரியுமா?

Madhubala: தமிழ் சினிமாவின் ஒரு ஹேண்ட்ஸம்மான ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித். எந்த நடிகைகளை கேட்டாலும் அஜித் ஒரு பக்கா ஜெண்டில்மேன் என்றுதான் சொல்வார்கள். பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எப்படி பார்க்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கக் கூடியவர் நடிகர் அஜித். இவர் சினிமாவிற்குள் எண்டிரி ஆகும் போது தமிழ் அவ்வளவாக பேச வராது.

இதை காரணம் காட்டியே இவரை கிண்டலடித்து வந்தனர். ஆரம்பகாலங்களில் இவருக்கு டப்பிங் பேசித்தான் படங்களை எடுத்தார்கள். ஒரு கட்டத்திற்கு பிறகு நானே பேசுகிறேன் என முயற்சி எடுத்தார் அஜித். தமிழ் ஹீரோ மாதிரியே இருக்கமாட்டார் ஆரம்பத்தில். ஏதோ வெளி நாட்டில் இருந்து வந்தவர் போலத்தான் அஜித்தின் தோற்றம் இருக்கும். ஏன் இப்பவும் கூட அப்படித்தான் இருக்கிறார்.

இதையும் படிங்க: அதெல்லாம் அடக்குமுறை இல்ல… பிரியங்காவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்…

அதுவும் வெள்ளை நிற தலைமுடியுடன் பக்கா வெளி நாட்டு வாசியாகவே தெரிகிறார். இதை பற்றித்தான் நடிகை மதுபாலா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அஜித்தை பற்றி மதுபாலாவிடம் கேட்ட போது ‘அஜித் ஒரு அதிநவீன மனிதர் மாதிரி இருப்பார். அதாவது அவரது உடையில் இருந்து தோற்றம் வரை ஒரு நகர மனிதராக காணப்படுவார். இதுவரை தமிழ் சினிமாவில் அப்படி யாரும் வந்ததில்லை. அஜித்தான் முதல் ஹீரோ’என மதுபாலா கூறியிருக்கிறார்.

அதாவது அஜித்தின் தோற்றம், அவர் அணியும் கோட் சூட் எல்லாவற்றையும் பார்க்கும் போது மற்றவர்களிடமிருந்து கொஞ்சம் வித்தியாசமாக தெரிவார். எத்தனையோ ஹீரோக்கள் கோட் சூட் வந்து நின்றாலும் அஜித் தனியாக தெரிவார். அந்த லுக் அவரிடம் மட்டும்தான் இருக்கும். மேலும் அஜித்தின் அந்த நடை பற்றியும் மதுபாலா கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஆரம்பிச்சாச்சு லோகேஷின் எல்சியூ! ஆனா அதுல ஒரு சின்ன ட்விஸ்ட்.. கூலிதானே நினைக்கீங்க

பில்லா , ஆரம்பம் போன்ற படங்களில் அவர் நடக்கும் போது பின்னாடி ஒரு பிஜிஎம் வரும். அவருடைய அந்த ஸ்வாக் தான் அஜித்தின் தனி ஸ்டைல். இப்படி அஜித்தை பற்றி மதுபாலா ஒரு பேட்டியில் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இத்தனைக்கும் மதுபாலா அஜித்துடன் சேர்ந்து நடித்ததே இல்லை. அவரே அஜித்தை இந்தளவுக்கு ரசித்திருக்கிறார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top