விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் நடித்த சாச்சனா நமிதாஸ் 24 மணி நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிக்பாஸ் சீசன் தமிழ் 8 நிகழ்ச்சியில் இரண்டாவது போட்டியாளராக கலந்து கொண்ட மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சச்சனா நமீதாஸ்4 24 மணி நேரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் வந்த என ஆரம்பத்திலேயே விஜய் சேதுபதி அவரை பார்த்து கேள்வி எழுப்பினார். பிக் பாஸ் வீட்டில் இளம் போட்டியாளராக சச்சனா இந்த சீசனில் திறமையாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் அவரை வீட்டிற்கு அனுப்பி உள்ளதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை கடுப்பாக்கிய உள்ளது.

இதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவரை அழைக்காமலே இருந்திருக்கலாம் என்றும் இப்படி அழைத்து வந்து 24 மணி நேரத்தில் வீட்டிற்கு அனுப்புவது முழுக்க முழுக்க டிஆர்பி வெறி மட்டுமே என ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

விஜய் சேதுபதியின் ரெகமெண்டேஷன் ஆகவே பிக் பாஸ் வீட்டுக்குள் சச்சனா வந்திருப்பார் என்றும் சின்னப் பெண் என்பதால் மற்ற போட்டியாளர்கள் அவரை ஏமாற்றி வெளியே அனுப்பி விட்டார்களா என்கிற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.

விஜய் சேதுபதி அடுத்த வாரம் வந்து பார்த்தால் எங்கடா என் பொண்ண காணோம் என லட்சுமியை தேடி அலைந்த மகாராஜா பாகவே மாறிவிடப் போகிறார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒட்டுமொத்தமாகவே சீரியல் நடிகர்கள் அணிவகுத்து உள்ள நிலையில் ஏகப்பட்ட ட்ராமாக்கள்தான் வீட்டில் தினந்தோறும் நடக்கப்போகிறது என்றும் பிக்பாஸ் இன்னொரு சீரியல் என சீக்கிரமே விமர்சனங்கள் வரப்போவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடந்தால் மூச்சு வாங்கும் ஃபேட்மேன் ரவீந்தரை முதல் அழகாக வெளியேற்றி இருக்கலாம். வளர வேண்டிய இளம் பெண்ணை அனுப்பியது பெரிய தப்பு என கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *