latest news
தனுஷை திட்டி போட்ட பதிவை நீக்கிய விக்னேஷ் சிவன்!. பயந்துட்டியா குமாரு!..
திடீரென நடிகர் தனுஷை கடுமையாக விமர்சித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை நேற்று சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்கள் இந்த செய்திகளை வெளியிட்டு வந்தது. 2 நாட்களாக கங்குவாவை வைத்து செய்து கொண்டிருந்த ஊடகங்கள் தனுஷ் பக்கம் திரும்பின.
தனுஷைய கிழித்து தொங்கவிட்ட நயன்தாரா என செய்திகள் வெளியானது. விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் 2022ம் வருடம் நடைபெற்றது. திருமண சடங்குகள் தொடர்பான விஷயங்களை வீடியோவாக பதிவு செய்து நெட்பிளிக்ஸில் கொடுத்தால் பல கோடிகள் கல்லா கட்டலாம என கணக்கு போட்டது விக்கி – நயன் ஜோடி.
இதையும் படிங்க: நயன்தாரா திடீர் அறிக்கைக்கு பின்னால் இப்படி ஒரு திட்டமா? ஓ இதான் விஷயமா?
அதன்பின் 25 கோடி விலை பேசி விற்றது. அதில், தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை சேர்க்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டார். ஆனால், அதற்கு முறையாக தனுஷிடம் அனுமதி கேட்கவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால், வீடியோவில் அந்த காட்சிகளை சேர்த்ததால் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் தனுஷ். இதுதான் நயன்தாராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில்தான் தனுஷை திட்டி அறிக்கை வெளியிட்டார் நயன்தாரா. ’நீங்கள் அண்ணன், அப்பா ஆதரவில் வளர்ந்தவர், நான் சுயமாக வளர்ந்தவள்.. நீங்கள் ஒரு சேடிஸ்ட்.. நான் சொன்னதை திரித்து கட்டுக்கதைகள் சேர்த்து பேசுவீர்கள். ஆனால், உங்களை கடவுள் பார்த்திகொண்டிருக்கிறார்’ என பொங்கினார். ஒரு பக்கம் அவரின் கணவர் விக்னேஷ் சிவனும் இன்ஸ்டாகிராமில் கோபத்தை காட்டியிருந்தார்.
‘3 வினாடி வீடியோவுக்கு 10 கோடி நோட்டீஸ்’ என பதிவிட்டு இங்கே அதை இலவசமாக பகிர்கிறேன் என சொல்லி அந்த காட்சிகளை பகிர்ந்து ‘உங்களை பின் தொடரும் தீவிரமான ரசிகர்களை கருத்தில் கொண்டு உங்கள் போக்கை மாற்றிக்கொள்ளுங்கள். யார் மீதும் வெறுப்பு காட்டாதீர்கள். வாழு வாழ விடு.. அன்பை மட்டும் பகிருங்கள்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அப்படி போட்ட பதிவை இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த விவாகரத்தை சட்டப்பட்டி சந்தித்தால் தனுஷுக்கே வெற்றி கிடைக்கும் என பலரும் சொல்லி வரும் நிலையில்தான் அந்த பதிவை நீக்கியிருக்கிறார் விக்கி.
இதையும் படிங்க: Biggboss Tamil 8: இந்த வாரம் ‘வெளியேறியது’ இவர்தான்?