தனுஷை அசிங்கப்படுத்தினாரா நயன்தாரா? இனி தான் இருக்கு ஆட்டமே..!

Published on: November 24, 2024
dhanush nayanthara
---Advertisement---

தனுஷ், நயன்தாரா பிரச்சனை திருமண ஆவணப்படம் வெளிவரும் வரை பூதாகரமாக வெடித்தது. இப்போது அது வெளிவந்ததும் அமைதியாக போய்க்கொண்டு இருக்கிறது. உள்ளுக்குள் புகையுதா, இல்லாவிட்டால் இது பெரிய அளவில் வெடிக்குமா என்பது பற்றிப் பார்க்கலாம்.

Also read: தூங்குறதே இல்ல!.. மிருகத்தனமான உழைப்பு!.. தம்பியை ஒரேடியா புகழ்ந்து தள்ளிய செல்வராகவன்!..

நயன்தாரா, தனுஷ் பிரச்சனையில் வழக்கு நிச்சயமா நடக்கும். ரெண்டு பேருமே இதுவரைக்கும் அதைப் பற்றிப் பேசலை. தனுஷ் போட்ட நோட்டீஸ்சுக்கு நயன்தாரா நிச்சயமாக பதில் சொல்லணும். ஏன்னா நோட்டீஸ் கொடுத்து குறிப்பிட்ட நாள்களுக்குள் அவங்க பதில் சொல்லியே ஆகணும்.

அவர் நிச்சயமாக நயன்தாரா மீது வழக்கு தொடுப்பார். அவர் விடுறதா இல்லை. இன்னொன்னு இந்த சண்டையை நயன்தாரா பெரிதுபடுத்தி உள்ளார்னே சொல்லலாம் என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன். இதுபற்றி அவர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

dhanush nayanthara
dhanush nayanthara

திருமண விழாவுக்கு வரும்போது எனக்கு தனுஷ் பக்கத்துலயே சேர் போடுங்கன்னு சொல்லி உட்கார்ந்தங்களாம். அது மட்டும் அல்லாம கால் மேல கால் போட்டு கெத்தா இருந்தாங்களாம். அவரை வெறுப்பேத்துற மாதிரி அப்படி இருந்தாங்களாம்.

அதனால தனுஷ் இந்த கேஸை விடவே மாட்டாரு. முதல்ல நயன்தாராவுக்கு வேறு இடத்துல தான் சேர் போட்டாங்களாம். அப்புறம் தனுஷை வெறுப்பேத்துறதுக்காகவே அவர் பக்கத்துல நயன்தாரா சேர் போடச் சொன்னாங்களாம்.

இப்ப உள்ளவங்க நயன்தாராவை ஏன்டா புக் பண்ணனும்கற அளவுக்குத் தான் இருக்காங்க. ஆனா இன்னொரு முகமும் அவருக்கு இருக்கு. ஆனால் ஒருவரைக் காலி பண்ணனும்னு முடிவு பண்ணிட்டா அதுல வந்து விட்டுக்கொடுத்துப் போகறதே இல்லை.

நயன்தாராவுக்கு இருக்குற அரசியல் பின்புலம் தனுஷூக்கும் இருக்கத் தான் செய்யுது. அதனால அதை வச்சி எல்லாம் தனுஷை ஒண்ணும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Also read: சாய்பல்லவி கூட SK நடிப்பதில் சிக்கல்… பிரபலம் சொல்லும் புதுத்தகவல்

தனுஷ் விஷயத்தில் நயன்தாரா நீலாம்பரியாகவே ஆகிவிட்டார் என்றும் நிச்சயம் இதற்கு பதிலடி கொடுப்பார் என்றும் ரசிகர்கள் வலைதளங்களில் தங்கள் கருத்தைக் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.