Cinema News
நீ எடுக்குற முடிவு மத்தவங்களுக்கு சந்தோஷம் தரணும்… உனக்கு அல்ல! ரஜினி சொன்னது யாருக்கு?
சென்னை வானகரத்தில் இன்று ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்து வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் இவ்வாறு பேசினார். நான் அரசியலுக்கு வர்ரேன்னு சொன்னதும் நிறைய பேரு ஆலோசனை சொன்னாங்க. அதெல்லாம் கேட்டா நாம நிம்மதி, பணம் எல்லாத்தையும் இழந்துட வேண்டியது தான் என்று சொன்ன ரஜினியின் பேச்சைக் கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார் இபிஎஸ்.
Also read: அயோத்தி படத்தை மிஸ் செய்து விட்டேன்… பிரபல நடிகர் சொல்றத பாருங்க!..
தொடர்ந்து ரஜினி பேசும்போது ஏதாவது அரசியல் சம்பந்தமா முடிவு எடுக்கும்போது அந்த முடிவு உனக்கு மட்டும் சந்தோஷம் தருதா? மத்தவங்களுக்கும் தருதான்னு பாரு. உனக்கு மட்டும் சந்தோஷத்தைப் பார்க்காதே. உன்னைச் சுத்தி மத்தவங்களுக்கும் சந்தோஷம் வந்தா எடுன்னு சொல்வாங்க.
அந்த மாதிரி ஜானகி அம்மா யாருடைய ஆலோசனையையும் கேட்காம ஜெயலலிதா அம்மாவைக் கூப்பிட்டு ‘இந்த பாரும்மா, இந்த அரசியல் எனக்கு சரிப்பட்டு வராது. அதுக்கு நீங்க தான் கரெக்ட். அதுக்கு உங்ககிட்ட திறமை இருக்கு.
தைரியம் இருக்கு. அந்தப் பக்குவம் இருக்கு. இன்னும் சாதிச்சி பெரிய அளவுல கொண்டு வர உங்களால தான் முடியும். என்னால அது முடியாது. எங்க சைன் பண்ணனும்னு சொல்லுங்க. பண்றேன்’ என் சொல்லி முழுவதுமா இரட்டை இலையை ஜெயலலிதாகிட்ட ஒப்படைச்சி அரசியல்ல இருந்து விலகிட்டாங்க. அது எவ்வளவு பெரிய குணம்?
இந்த நூற்றாண்டு விழாவை இவ்வளவு விமரிசையாக கொண்டாடுறதுக்கு எடப்பாடி அவர்களுக்கு நன்றி என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார். நிகழ்ச்சியில் கவுதமி, விந்தியா உள்பட பலரும் கலந்து கொண்டு ரஜினியின் பேச்சை ரசித்தனர்.
சமீபத்தில் அரசியலுக்கு வந்தவர் விஜய். இவர் ஏற்கனவே ரஜினியுடன் சூப்பர்ஸ்டார் நாற்காலி விவகாரத்தில் இருந்தவர். அப்போது காக்கா, கழுகு கதை எல்லாம் அரங்கேறியது. தவிர, மக்களுக்கு நல்லது செய்றதுக்காகவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். என்னை வாழ வைத்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறேன் என்று மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
அதற்கு இதுதான் சரியான தருணம். அரசியல் நமக்கு ஒத்து வருமான்னு பூதக்கண்ணாடியை வைத்து யோசித்தால் சரிவராது. ‘பச்சைத் தமிழர்’ காமராஜர் வழியில் தவெக செயல்படும். நம்மைப் பார்த்து வேகமானவர்கள், விவேகமானவர்கள் என்று சொல்ல வேண்டும் என்று விஜய் பேசி இருந்தார்.
இந்தப் பேச்சில் பச்சைத்தமிழர், பூதக்கண்ணாடியை வைத்து யோசிப்பது ஆகியவற்றைப் பார்க்கும்போது ரஜினியைச் சாடுவது போலத் தெரியும். ஏனென்றால் அவர் தான் நான் அரசியலுக்கு வருவேன். வருவேன் என்று சொல்லி விட்டு உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியல் சரி வராது என்று ஒதுங்கினார்.
அதே போல அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். அவர் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னதும் தமிழன் தான் ஆளணும்னு முதலில் அவருக்கு நாம் தமிழர் சீமானே எதிர்ப்பு தெரிவித்தார்.
Also read: இப்படியெல்லாம் பேசாதீங்க?!.. அவர் அற்புதமான மனிதர்!… ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு!…
அந்த வகையில் தற்போது ரஜினி யாரைச் சொல்லி இருக்கிறார் என்பது தெரியவில்லை. தலைவா படத்திற்கு எழுந்த சிக்கல்தான் விஜய் அரசியலுக்கு வர ஒரு ஆரம்பப்புள்ளி என்றும் சொல்கின்றனர். அந்தவகையில் பார்த்தால் ரஜினியின் இந்தப் பேச்சு ஒருவேளை விஜய் பேச்சுக்குப் பதிலடியாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.