கட்சி தலைவர் தானே… போஸ் கொடுத்தா போதுமா..? விஜய்க்கு லியோனி சரமாரி கேள்வி

Published on: March 18, 2025
---Advertisement---

விஜய் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர். அதுவும் உச்சநட்சத்திரமான ரஜினிக்கு இணையாக சம்பளம் வாங்கி வருபவர். அவருக்கு என்று பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

ஆனால் திடீர் என்று விஜய் அரசியலுக்குள் இறங்கி விட்டார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய அவர் முதல் மாநில மாநாட்டையும் திரைப்படத்தில் வரும் சூப்பர் சீன் மாதிரி வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டார். கட்சிக் கொடி, கொள்கைப்பாடல், அவரோட கொள்கைகள் என்று அத்தனையும் பிரமிக்க வைத்துவிட்டன.

அம்பேத்கார் நூல் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதலில் தொல்.திருமாவளவன் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் சில பல காரணங்களால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. தனது கடைசி படம் தளபதி 69 தான் என்று அறிவித்த அவர் ஒரு புறம் பட வேலைகளிலும், இன்னொரு புறம் அரசியல் வேலைகளிலும் அயராது உழைத்து வருகிறார்.

சமீபத்தில் விஜய் வெள்ள நிவாரணத்துக்காக பாதிக்கப்பட்ட இடத்துக்குப் போய் நேரடியாக மக்களை சந்திக்காமல் அவர்களை வரச்சொல்லி நிவாரணம் கொடுத்தது பேசுபொருளானது. அது ஒரு சாரருக்கு மட்டும் போய்ச்சேரும். பலரும் பயன்பெற முடியாது. மேலும் நூற்றுக்கணக்கான மக்களைப் போய் சந்தித்துப் பேசும்போதுதான் அவர்களது கஷ்டநஷ்டங்கள் தெரியும் என்றும் பேசப்பட்டது.

vijay

vijay

இந்நிலையில் பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி தளபதி விஜய்க்கு சரமாரியாக பல கேள்விகளை முன்வைத்துள்ளார். என்னன்னு பாருங்க…

சும்மா ஒரு கூட்டத்தைக் கூட்டி விசில் அடிக்கவிட்டு, அப்புறம் கோவாவுக்கு போய் கல்யாணத்துல போஸ் கொடுக்குறவர் கட்சியினுடைய தலைவர் அல்ல. இந்த நாட்டில் என்னென்ன நடக்குதோ அதற்கு எல்லாத்துக்குமே பதில் கொடுக்கணும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி புதுசா கட்சி ஆரம்பிச்சாரே. அந்த தலைவர் அதைப்பற்றி சொல்லி இருக்காரா. அதானி இப்படி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறாரே. பாராளுமன்றத்தில் 15 நாள்கள் ஆக விவாதம் நடக்காமல் இருக்கிறதே. நீங்க கட்சி ஆரம்பிச்சிருக்கற தலைவர் தானே. இதைப் பற்றி என்ன நினைக்கிறன்னு சொல்லணும்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment