Connect with us

latest news

எதுவுமே நல்லா இல்லை.. கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷாவை வீணடித்த மணிரத்னம்.. தக் லைஃப் விமர்சனம்!

நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னத்துடன் கமல்ஹாசன் இணையாமல் இருந்த நிலையில், அதை அப்படியே விட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. பொன்னியின் செல்வன் படத்தையே நாடகம் போல எடுத்து வைத்த மணிரத்னத்தை பலரும் விமர்சித்தனர். இரண்டாம் பாதியில் சில கதைகளையே மாற்றியதை பார்த்து ரசிகர்கள் கடுப்பானார்கள்.

செக்கச் சிவந்த வானம் படத்தில் கூட விஜய் சேதுபதி போர்ஷன் எல்லாம் சிறப்பாகவே இருந்தது. ஆனால், இங்கே கமல்ஹாசனை மட்டுமே சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரைச் சுற்றியே கதையை எழுதி வைத்திருக்கிறார் மணிரத்னம்.

லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் கடைசியாக சூர்யா என பலருக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்து வைத்து இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார். ஆனால், இந்தியன் 2வுக்கு போட்டி போடும் அளவுக்கு ஒரு பழைய கதையை எடுத்துக் கொண்டு கமல்ஹாசனின் பணத்தை வைத்து மணிரத்னம் விளையாடிவிட்டார்.

நாயகன், தளபதி படங்களை போல கிளாசிக் டச் கூட இந்த படத்தில் இல்லாதது தான் ரொம்பவே வேதனை தரும் விஷயம். கதையாக பார்த்தால், அதில் ஒன்றும் இல்லை கீழே போட்டுவிடு என்கிற காமெடி தான் நினைவுக்கு வருகிறது.

சிம்புவின் அப்பா சாவுக்கு காரணம் தனது அண்ணன் என்று தெரிந்த நிலையில், சிம்புவை காப்பாற்றி தன் மகனாகவே வளர்க்கிறார் ரங்கராய சக்திவேல் நாயக்கராக நடித்துள்ள கமல்ஹாசன். ஆரம்பத்தில் வரும் டீ ஏஜிங் காட்சிகள் எல்லாம் சிறப்பாகவே உள்ளது. ஆனால், ஜோஜு ஜார்ஜ் அந்த காத்தில் இருந்து இந்த காலம் வரை அப்படியே இருக்கிறாரே என்பது லேசாக கேள்வியை எழுப்புகிறது.

த்ரிஷா எல்லாம் அண்டர்கவர் ஏஜென்ட்டாக இருப்பார், அசோக் செல்வன் போர்ஷன் செமையா இருக்கும் என்று பார்த்தால், எதிலுமே சுவாரஸ்யம் இல்லாமல், பழிவாங்கும் கதையை மட்டுமே எடுத்து வைத்திருக்கிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் போட்ட பாட்டை எல்லாம் பாதியிலேயே நிப்பாட்டியும், சில பாடல்களை மொத்தமாக நீக்கியும் மணிரத்னம் வழக்கம் போல வேலை காட்டி விட்டார். சிம்புவுக்கு கிளைமேக்ஸில் கமல்ஹாசன் உடன் சண்டை போடும் போது தான் நடிக்கவே வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. மற்றபடி அவருடைய காட்சிகள் எல்லமே டல் அடிக்கிறது.

த்ரிஷாவை கமல்ஹாசனும், சிம்புவும் மாற்றி மாற்றி ரொமான்ஸ் செய்வது எல்லாம் படு மொக்கையாக உள்ளது. மொத்தத்தில் இந்த தக் லைஃப் திரைப்படம் 2.46 மணி நேர டைம் வேஸ்ட் படம் தான்.

ரேட்டிங்: 2/5.

author avatar
Saranya M
Continue Reading

More in latest news

To Top