D55: ஒருபக்கம் மாமனார்… ஒருபக்கம் மருமகன்.. தனுஷை வைத்து படம் தயாரிக்கும் கமல்!….

Published on: December 5, 2025
---Advertisement---

Dhanush: தனுஷின் 55 ஆவது படத்தை அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையும் நடந்தது. இந்தப் படத்தை பிரபல தமிழ் சினிமா பைனான்சியர் மதுரை அன்புச் செழியன் தயாரித்துவந்தார்.  மேலும் இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார் எனவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில்தான் இந்த படம் தற்போது டிராப் ஆகி இருக்கிறது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் 135 கோடி. மேலும் கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டியை நடிக்க வைக்க முடிவு செய்து அவருக்கான சம்பளம் 25 கோடியும் சேர படத்தின் பட்ஜெட் 160 கோடியாக மாறிவிட்டது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பைனான்சியர் அன்புச்செழியன் ‘இவ்வளவு செலவு செய்தால் என்னால் இந்த படத்தை வியாபாரம் செய்ய முடியாது. வேறு தயாரிப்பாளரை வைத்து படத்தை எடுத்துக்கொள்ளுங்கள்’ என சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

d55

தற்போது இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். தனுஷுக்கு நெருக்கமான ஐசரி கணேஷ், சன் பிக்சர்ஸ் போன்ற தயாரிப்பாளர்களிடம் இப்படத்தை கைமாற்றி விடலாம் என அவர் முயற்சிகள் செய்தபோது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரிக்க முன்வந்திருக்கிறது.

ஏனெனில் ஏற்கனவே ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த அமரன் படத்தையும் ராஜ்குமார் பெரியசாமிதான் இயக்கியிருந்தார். அந்த நிறுவனத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பவர் மகேந்திரன்தான். ராஜ்குமார் பெரியசாமி, அன்பு செழியன் கூட்டணிக்கும் காரணமாக இருந்ததும் இவர்தான். எனவே இப்போது அவரே உள்ளே வந்து ‘படத்தை நாங்கள் தயாரிக்கிறோம்’ என சொல்லி விட்டாரம். ஒரு பக்கம் ரஜினியை வைத்து ஒரு படம், மறுபக்கம் அவரின் மருமகன் தனுஷை வைத்து ஒரு படம் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் களைகட்ட துவங்கியிருக்கிறது.

Leave a Comment