‘அருணாச்சலம்’ ஹிட் கொடுத்தும் நம்பிக்கை இல்லையா? சுந்தர் சியுடன் இணைய அந்தப் படம்தான் காரணமா?

Published on: December 5, 2025
---Advertisement---

இப்போது டாக் ஆஃப் தி டவுனாக இருப்பது சுந்தர் சிதான். அதுவும் ரஜினியை வைத்து கமல் தயாரிப்பில் ஒரு பெரிய ஸ்கேலில் படம் பண்ண போகிறார் சுந்தர் சி. ஏற்கனவே இதுபற்றி அரசல் புரசலாக செய்தி வந்தாலும் திடீரென வந்த இதன் அறிவிப்பு கோடம்பாக்கத்தையே கதிகலங்க வைத்துவிட்டது. லோகேஷ், நெல்சன் என இப்போதுள்ள இயக்குனர்களுடன் படம் பண்ணும் ரஜினி எப்படி சுந்தர் சியுடன் போய் சேர்ந்தார் என்று அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

ரஜினி மட்டுமில்லாமல் ரசிகர்களாகிய நமக்கும் சுந்தர் சி அவுட்டேட்டடு இயக்குனர் என்றுதான் தெரியும். எப்படி ரஜினி சம்மதித்தார் என்பதுதான் கேள்வி. ரஜினியை பொறுத்தவரைக்கும் ஒரு லைட் சப்ஜெக்ட்டாக படம் பண்ண வேண்டும் என நினைத்திருக்கிறார். அதற்கேற்ப இயக்குனர்களை தேடிக் கொண்டிக்க சுந்தர் சிதான் சரியான ஆள் என்று தோன்றியிருக்கிறது.

சுந்தர் சி இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். ரஜினி மனதில் சுந்தர் சியை பற்றி எந்தளவு நினைத்திருப்பார் என்று தெரியாது. அதனால் தான் எடுத்தவரைக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் காட்சிகளை போட்டுக் காண்பித்திருக்கிறார் சுந்தர் சி. அதை பார்த்து  மிரண்டு போய்விட்டாராம் ரஜினி. கமலுக்கும் போட்டுக் காண்பித்திருக்கிறார்.

mookuthi amman2

அவருக்கும் மிகவும் பிடித்து போய்விட்டது. அருணாச்சலம் படம் ஹிட்டானாலும் இப்போதுள்ள காலகட்டத்திற்கு ஏற்ப சுந்தர் சி இருக்கிறாரா என்று ரஜினிக்கும் நினைக்கத்தான் தோன்றும். அதற்கேற்ப மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அந்த காட்சிகள் அவரை பிரமிக்க வைத்திருக்கிறது. அதன் பிறகுதான் சுந்தர் சி ரஜினி கூட்டணி கன்ஃபார்ம் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது. 

Leave a Comment