Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நேற்றைய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில் கம்ருதீன் சொல்லியிருக்கும் விஷயம் பலருக்கு முகச்சுழிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 பரபரப்பாக நடந்து வருகிறது. தொடக்கத்தில் இந்த சீசன் சுவாரஸ்ய கொடுக்குமா என்று கேள்வி பலரிடம் இருந்தது. ஏனெனில் உள்ளே சென்றிருந்த பலரும் பெரிய அளவில் அறிமுகம் இல்லாத போட்டியாளர்களாக தான் சென்றார்கள்.
ஆனால் மற்ற சீசன்களைவிட தொடங்கிய முதல் நாளிலிருந்து பல சண்டைகளை பிக் பாஸ் வீடு பார்த்து வருகிறது. அது மட்டுமில்லாமல் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை நிறைய போட்டியாளர்கள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வதையும் பார்க்க முடிகிறது.
இந்த பிரச்சனையின் காரணமாக தான் சரியாக விளையாடி வந்த ஆதிரை கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து துஷாருடன் காதல் பேச்சு பேசி வரும் அரோராவை வெளியேற்றலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நன்றாக விளையாடு வரும் பார்வதி மற்றும் கம்ருதீன் இடையே சில மறைமுக உரையாடல்கள் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவது போல் இருக்கிறது. இதற்கு முன்னரே இருவரும் விவகாரமாக பிளாஸ்டிக், சாப்பாடு என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினர்.
அந்த வகையில் நேற்றைய லைவ்வில் பார்வதி கையில் கம்ரூதின் ஹெச், ஓ, ஆர், என் என எழுதி அவரை ஒரு மார்க்கமாக பார்த்தார். அது தனக்கு அந்த ஆசை வந்துவிட்டதை ஆங்கிலத்தில் குறிப்பிட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
Another Slipper shot/Red card ♦️ confirmed for this “Makku”rudin (A) #Kamrudin ????
Follow @BiggBossTamil09 ????️ for more updates ❤️ #BiggBossTamil9 #BiggBoss9Tamil #BiggBossSeasonTamil9 pic.twitter.com/7io6FENIzr
— BiggBossTamil09 (@BiggBossTamil09) October 29, 2025
Another Slipper shot/Red card ♦️ confirmed for this “Makku”rudin (A) #Kamrudin ????
Follow @BiggBossTamil09 ????️ for more updates ❤️ #BiggBossTamil9 #BiggBoss9Tamil #BiggBossSeasonTamil9 pic.twitter.com/7io6FENIzr
— BiggBossTamil09 (@BiggBossTamil09) October 29, 2025
இதை பாதியில் புரிந்துக்கொண்ட பார்வதியும் அவரை அடித்து உனக்கெல்லாம் என திட்டுகிறார். இதன் காரணமாக தான் வாட்டர்மெலன் ஸ்டாரிடம் கம்ருதீன் குறித்து பார்வதி சொன்னாரா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. 24 மணி நேர லைவ் நிகழ்ச்சியில் கம்ருதீன் செய்கை கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வாரம் எலிமினேஷனில் அவர் இருக்கிறார் என்றாலும் அரோரா, கலை இருப்பதால் தப்பித்து விடுவார் என்றே நம்பப்படுகிறது. ஆனால் உள்ளே வரும் வைல்ட் கார்ட் இதை கேள்வி கேட்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
