
latest news
OTT: தென்னிந்திய சினிமாவின் இந்த வார ஓடிடி அப்டேட்… ஆனா ஒரு சோக செய்தி இருக்கு!
OTT: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வார இறுதிக்கு டைம்பாஸாக அமைய இருக்கும் திரைப்படங்களின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களின் தொகுப்புகள்.
பொதுவாக ஓடிடி ரிலீஸ் வாரா வாரம் நடப்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். ஆனால் இந்த முறை தமிழ் ரசிகர்களுக்கு சோக செய்தியாக சின்ன பட்ஜெட் படங்களை தவிர தமிழ் படம் எதுவுமே இந்த முறை வெளியிடப்படவில்லை.
சன் நெக்ஸ்ட் ஓடிடியில் இந்த வாரம் இரண்டு படங்கள் வெளியாக இருக்கிறது. Good day மற்றும் Gamblers என்ற படங்கள் மட்டுமே. இரண்டுமே டாப் ஹிட் படம் கிடையாது என்றாலும் இந்த வாரம் இருக்கும் ஒரே வழி இந்த படங்கள்தான்.

ஆஹா ஓடிடியில் இந்த வாரம் Akkenam ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஆங்கில படமான Drop மற்றும் ஆங்கில டாக்குமெண்ட்ரியான BloodyTrophy ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த வாரம் ஆங்கில படங்களின் ரிலீஸே அதிகம். அந்தவகையில், TheNightAlwaysComes, SnackShack, Fixed, FinalDraft உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது.
ஜீ5 ஓடிடியில் இந்த வாரம் இந்தியில் Tehran மற்றும் மலையாள படமான JanakiVsStateOfKerala திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. பிரைம் ஓடிடியில் இந்தி படமான Andhera மற்றும் ஆங்கில படமான Butterfly சீசன்1 வெளியிடப்பட இருக்கிறது.
சோனிலைவ் ஓடிடியில் இந்தி படமான CourtKacheri வெளியாக இருக்கிறது. சிம்ப்ளிசவுத் ஓடிடியில் தமிழ் திரைப்படமான Yaadhumariyaan வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பிரபல தமிழ் படங்கள் இல்லாமல் இருப்பது கண்டிப்பாக சோக செய்திதானே!