Idli kadai: ராயல் திரைப்படத்திற்கு பின் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தில் ராஜ்கிரன், சத்யராஜ், பார்த்திபன், நித்யாமேனன், அருண் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் ஆடியோ லான்ச் சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
அந்த விழாவில் பேசிய தனுஷ் சிறுவயதில் தான் சந்தித்த பல சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக தனது சொந்த ஊரான தேனி கிராமத்தில் வசித்த போது இட்லி சாப்பிட மிகவும் ஆசைப்பட்டதாகவும், தனது சகோதரிகளுடன் வயலில் பூ பறித்து அதில் வந்த பணத்தில் இட்லி கடைக்கு சென்று இட்லி சாப்பிட்டதாகவும் கூறியிருந்தார்.
இட்லி கடை திரைப்படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி ரிலீஸ் ஆக வெளியாக வருகிறது. இந்நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று திருச்சியில் நடந்தது. அந்த விழாவில் தனுஷ், அருண் விஜய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய தனுஷ் ‘யாருடைய கதையும் படமாக எடுக்கவில்லை. எனது ஊரில் நான் பார்க்க சம்பவங்கள், நிஜ மனிதர்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்பு, அதில் என் கற்பனை கலந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன்’ என விளக்கம் அளித்தார்.
இந்த படத்தில் சிறு வயது தனுஷாக ஒரு சிறுவன் நடித்திருக்கிறார். அந்த சிறுவனின் தாயார் மேடையில் பேசும்போது ‘நான் உயிர் உள்ளவரை உங்களை நினைத்துக் கொண்டே இருப்பேன் சார். என் பையன் வயிற்றில் இருக்கும் போதே உங்களை நினைத்துதான் பெத்தேன். அதனாலதான் என் பையன் உங்கள மாதிரியே இருப்பான். நான் இருந்தாலும், இல்லனாலும் தனுஷ் சாருக்கு நீ விஸ்வாசமாக இருக்கணும்னு சொல்லித்தான் அவனை வளர்க்கிறேன்’ என பேசி இருந்தார்.
அவரின் பேச்சைக் கேட்டு தனுஷ் கண்கலங்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பெண்மணி பேசுவதை பார்த்தால் அவர் தனுஷின் தீவிர ரசிகையாக இருப்பார் என கணிக்கப்படுகிறது.
