சிம்புவும், அஜித்தும் நேற்று மலேசியாவில் சந்தித்துக் கொண்ட விஷயம்தான் நேற்று முதலில் எக்ஸ் தளத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அஜித் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். துபாய் ஐரோப்பிய நாடுகள் முடிந்து தற்போது மலேசியாவில் கார் ரேஸ் நடக்கிறது. அதற்காக அங்கு சென்றிருந்த அஜித்தைத்தான் சிம்பு மீட் பண்ணியிருக்கிறார்.
இந்த சந்திப்புக்கு பின்னால் ரசிகர்களுக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கிறது.
முதலில் அஜித் மலேசியா போனதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று அங்கு நடக்கும் கார் ரேஸ்.. மற்றொன்று அஜித் Campa என்கிற குளிர்பான விளம்பரத்திலும் Nova என்கிற ரியல் எஸ்டேட் விளம்பரத்திலும் நடிக்கவிருக்கிறார், அதேபோல் இயக்குனர் ஏ.எல் விஜய் அஜித் தொடர்பான டாக்குமெண்ட்ரி படம் ஒன்றை இயக்கி வருகிறார். அங்கு அஜித்தின் எல்லா நடவடிக்கைகளையும் அவர் ஷூட் செய்து வருகிறார்.
ஒருபக்கம் மலேசியாவில் ஒரு நகைக்கடையை திறந்து வைக்க சிம்பு மலேசியா சென்றார். அந்த விழாவை முடித்துவிட்டு விமான நிலையம் செல்லும் வழியில் அந்த கார் ரேஸ் மைதானம் இருக்க அஜித் இருப்பது தெரிந்து அடிப்படையில் அஜித் ரசிகரான சிம்பு அவரை பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்.
இது அஜித்துக்கு சொல்லப்பட அவரும் ‘வாங்க’ என்று சொல்ல சிம்பு அங்கு சென்றுருக்கிறார். அஜித்தை வரவேற்று உபசரித்து ‘நீங்கள் நிறைய படங்களில் நடிக்க வேண்டும்’ என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்
அஜித். சிம்பு அஜித் சந்தித்துக்கொண்ட புகைப்படங்களும் , வீடியோக்களும் ஏற்கனவே வெளியானது. அதில் சிம்புவும் அஜித்தும் அணிந்திருந்த டீசர்ட்களில் Campa Engery பெயரும் Nova என்கிற பெயரும் அச்சடிக்கப்பட்டிருந்தது..

இந்த இரண்டு விளம்பரங்களையும் அஜித்தின் ஃபேவரைட் இயக்குனர் சிறுத்தை சிவாதான் இயக்கப் போகிறார். அதற்காக அவரும் சமீபத்தில் மலேசியா சென்றார். அஜித் கலந்து கொண்டிருக்கும் கார் ரேஸ்களில் இந்த இரண்டு நிறுவனங்களும் ஸ்பான்சராக இருக்கலாம் என கருதப்படுகிறது. அங்கு சென்ற சிம்பு ‘எனக்கும் ஒரு டீசர்ட் கொடுங்க சார்’ என்று கேட்க அவருக்கும் ஒரு டீசர்ட் கொடுத்திருக்கிறார் அஜித்.
