திடீரென ராமராஜனுடன் மீட்டிங் போட்ட கனகா!.. வைரல் புகைப்படம்….

Published On: January 12, 2026
ramarajan
---Advertisement---

பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா கரகாட்டக்காரன் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.. கங்கை அமரன் கங்கை அமரன் இயக்கிய இந்த படத்தில் ராமராஜன் ஹீரோவாக நடித்திருந்தார்.. வடிவுக்கரசி, கவுண்டமணி, செந்தில் கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்து 1989ம் வருடம் வெளியான இந்த திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. தமிழகத்தில் உள்ள சில திரையரங்குகளில் கரகாட்டக்காரன் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. ராமராஜன் நடித்த படத்திலேயே அதிக வசூலை பெற்றது இந்த படம்தான்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து ரஜினி, கமல் போன்ற நடிகர்களே ஆச்சர்யப்பட்டார்கள். இந்த படத்திற்கு பின் பல படங்களிலும் கதாநாயகியாக நடித்தார் கனகா. ஆனால் திடீரென தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவரின் அம்மா தேவிகா மறைந்த பின்னர் சென்னையில் உள்ள வீட்டில் தனியாக வசித்தார் கனகா. யாரையும் திருமணமும் செய்துகொள்ளவில்லை. தன்னுடைய சொத்துக்களை தனது அப்பா அபகரிக்க முயல்கிறார் எனவும் சொன்னார். திரைப்படங்களில் நடிப்பதையும், மற்றவர்களை சந்திப்பதையும் கூட தவிர்த்து விட்டார்.

மிகவும் அரிதாக அவரின் சில புகைப்படங்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில்தான் இன்று நடிகர் ராமராஜனை அவரின் வீட்டில் சந்தித்து அவருடன் ஒரு மணி நேரம் செலவழித்திருக்கிறார் கனகா. ராமராஜன் வீட்டில் அவருடன் மதிய உணவு அருந்தியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.