தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் துபாயில் ரேஸில் கலந்து கொண்டு வரும் அஜித்தை சந்தித்த வண்ணம் இருக்கிறார்கள். சமீபத்தில்தான் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபிராஜ் அஜித்தை சந்தித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான அந்தப் படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது. படத்தை பெரிய அளவில் கொண்டாடி தீர்த்தனர். வசூலும் தாறு மாறாக இருந்தது. அந்தப் படத்திற்கு பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்து கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார் அஜித். முதலில் துபாயில் நடந்த 24எச் சீரிஸில் தன்னுடைய அணியினருடன் கலந்து கொண்ட அஜித் மூன்றாவது இடத்தை பிடித்தார்.
அதன் மூலம் இந்தியாவே பெருமை அடைந்தது. அவருக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இதற்கிடையில் பத்மபூஷன் விருதும் கிடைத்தது. இப்படி நடிப்பை தவிர்த்து பிற விஷயங்களில் முன்னேறி வருகிறார் அஜித். ஏற்கனவே சினிமாவில் உச்ச இடத்தை அடைந்தார். அவருடைய ஒரே பேஷன் ரேஸ்தான்.
அதனால் ஆரம்பத்தில் அவரால் ரேஸில் கவனம் செலுத்த முடியவில்லை. சினிமாவில் ஒரு நிலைக்கு வந்த பிறகு தன்னுடைய பேஷனை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவருக்கு ரசிகர்களில் இருந்து பிரபலங்கள் வரை அனைவரும் ஆதரவுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபலங்கள் அடிக்கடி வெளி நாடு செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது அங்கு அஜித் ரேஸ் நடந்தால் உடனே அவரை சந்தித்து புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் ஸ்ரீலீலா, அனிருத் என அடுத்தடுத்து அஜித்தை சந்தித்த நிலையில் இன்று விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ரேஸ் நடக்கும் இடத்திற்கே சென்று அஜித்தை சந்தித்துள்ளனர். அந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DTm38bciKPj/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==




