பிரபல நடிகரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் நடித்த கடைசி படமான ‘ஜன நாயகன்’ சமீபத்தில் தான் ரிலீஸ் ஆனது.
விஜய் சினிமாவுக்கு குட் பை சொல்லியிருக்கும் இந்த டைமில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தனது ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறார்.
இவர் இயக்கியிருக்கும் முதல் படமான ‘சிக்மா’வை நாளை (அக்டோபர் 2-ஆம் தேதி) உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த படத்தில் சந்தீப் கிஷன் தான் கதாநாயகன்.
அவருக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால், படம் தெலுங்கு மொழியிலும் வெளியாகிறது. அதுவும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 400 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறதாம்.




