முன்னாள் நடிகர் மற்றும் தற்போதைய தமிழகத்தின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கியிருக்கிறார். சிக்மா என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அந்த திரைப்படம் இன்று காலை உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். Money Heist போல ஒரு திரில்லர் திரைப்படமாக சிக்மாவை சஞ்சய் உருவாக்கியிருக்கிறார். கடந்த பல நாட்களாக சிக்மா படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஜேசன் சஞ்சய் தொடர்ந்து கலந்து கொண்டார்.
மேலும், பல ஊடகங்களுக்கு அவர் பேட்டிஒயும் கொடுத்திருந்தார். அதில் தனது அப்பா மற்றும் அவரின் முதலமைச்சர் பதவி குறித்தும் அவர் பேசியிருந்தார். இன்று சிக்மா திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் அவருக்கு திரத்துறையிலிருந்து சூர்யா, ஜோதிகா, கார்த்தி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை கூறியிருந்தனர்..

இந்நிலையில், சென்னை வடபழனி பகுதியில் உள்ள கமலா திரையரங்கில் முதல் காட்சியை பார்ப்பதற்காக ஜேசன் சஞ்சயின் அம்மா சங்கீதா மற்றும் ஜேசனின் சகோதரி திவ்யா ஆகியோர் தியேட்டருக்கு வந்தனர்.அப்போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ விஜய் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. விஜயின் மகள் திவ்யா பொதுவாக ஊடக வெளிச்சம் படாமல் இருக்கும் நிலையில் அவர் எப்படி இருக்கிறார் என பார்ப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
முதல் அமைச்சர் தளபதி விஜய் மனைவி சங்கீதா மகள் சாஷா சிக்மா பார்க்க வந்த காட்சி pic.twitter.com/0J1NQ58Dp4
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) October 2, 2026





