Sigmaவை அடுத்து டைரக்ஷனா, ஹீரோ அவதாரமா?… ஜேசன் சஞ்சய் சொன்ன பதில்?
ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள 'சிக்மா' படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
முன்னணி நடிகராக கோலிவுட்டில் வலம் வந்த விஜய் இப்போது தமிழக முதலமைச்சராக உள்ளார். இவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் சீட்டில் அமர்ந்து எடுத்து முடித்த படம் ‘சிக்மா’.
இப்படம் இன்று (அக்டோபர் 2-ஆம் தேதி) தான் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
இதில் ‘மாநகரம்’ புகழ் சந்தீப் கிஷன் தான் கதாநாயகன் ஆக நடித்துள்ளார். தற்போது, இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேசுகையில் “கடந்த மூணு வருஷமா என்னோட டிராவல் பண்ண லைகா புரொடக்ஷனுக்கும், ‘சிக்மா’ டீம் எல்லாருக்குமே பெரிய நன்றி.
இன்னைக்கு காலைல படத்தை பார்த்த என்னோட அம்மா & தங்கச்சி ரெண்டு பேருமே என்னை வாழ்த்தினாங்க. அடுத்து நான் டைரகட் பண்ணப் போறனா, இல்ல ஹீரோவா நடிக்கப் போறனான்னு இனிமே தான் முடிவு பண்ணனும்” என்று கூறியுள்ளார்.