latest news

அடேங்கப்பா… முதல் நாளே 100 கோடியை நெருங்கிய Drishyam The Conclusion!

'த்ரிஷ்யம்: த கன்க்ளூஷன்' நேற்று தான் திரையரங்குகளில் வெளியானது.

மலையாளத்தில் நடிகர் மோகன் லால் – இயக்குநர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படம் தான் ‘த்ரிஷ்யம் 3’.

இதன் ஹிந்தி ரீமேக்கான ‘த்ரிஷ்யம்: த கன்க்ளூஷன்’ (Drishyam: The Conclusion) நேற்று (அக்டோபர் 2-ஆம் தேதி) தான் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இதில் அஜய் தேவ்கன் தான் ஹீரோவாக நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக ஷ்ரேயா சரண் வலம் வந்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குநர் அபிஷேக் பதக் இயக்கியுள்ளார். இதில் முக்கிய கேரக்டர்களில் ஜெய்தீப் அஹ்லாவத், தபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இதன் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.95.10 கோடி என்று தகவல் கிடைத்திருக்கிறது.

Author