பிரேக்கப் காலத்தில் யுவன் பாடல்கள்தான் கேட்டுக் கொண்டிருந்தேன் – சஞ்சய்
முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் மகன் ஜேசன் சஞ்சய்
முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் மகன் ஜேசன் சஞ்சய். சினிமாவில் நட்க்க வருவார் என்று பலரும் எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்கா வண்ணம் டைரக்ஷன் துறையில் அவர் நுழைந்தார். இவரது இயக்கத்தில் சிக்மா நேற்று வெளியானது. படம் மேக்கிங் நன்றாக இருப்பதாகவும், ஆனால் திரைக்கதையில் சுவாரஸ்யமில்லை என்றும் பலர் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சஞ்சய் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய காதல் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், காலேஜ் படிக்கும் போது நான் லவ் பண்ணேன். மொத்தமாக ஒன்றரை வருடம் அந்த ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். பிறகு ரெண்டு பேரும் சுமூகமாக பேசி பிரிந்து விட்டோம் அந்த சமயத்தில் யுவன் சங்கர் ராஜாவின் லவ் பாடல்களாக கேட்டுக் கொண்டிருப்பேன். அதற்கு பிறகு வாழ்க்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்து விட்டேன் என்று ஜேசன் சஞ்சய் கூறியுள்ளார்.