Cinema News
இப்படி எல்லாமா ஏமாத்துவாங்க!…டாக்டர் பட தயாரிப்பாளருக்கு வந்த சோதனை…
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 9ம் தேதி வெளியான திரைப்படம் டாக்டர்’. இப்படத்தில் யோகிபாபு, பிரியங்கா மோகன், வினய், தீபா சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் சிறப்பாக இருப்பதாக படத்தை பார்த்த பெரும்பாலானோர் கூறி வருகின்றனர். சிலர் இப்படத்தை டைம் பாஸ், ஆவரேஜ் எனக்கூறினாலும் படம் நன்றாக இல்லை என எவரும் கூறவில்லை. மேலும், 7 மாதங்களுக்கு பின் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
டாக்டர் படம் வெளியாகி முதல் நாளே இப்படம் ரூ.7 கோடியை வசூல் செய்துள்ளது. தற்போது 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் ரூ.25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் வழக்கமாக வார இறுதி நாட்களில்தான் தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆகும். ஆனால், திங்கள், செவ்வாய், புதன் என வார நாட்களிலேயே டாக்டர் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது டாக்டர் படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்… செல்வராகவன் படத்தில் செம சர்ப்பரைஸ்….
கடந்த வருடம் 6 மாதம் கழித்து தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் மீண்டும் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வந்தது. தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் இதை சாதித்து காட்டியுள்ளது. எனவே, விஜய் ரேஞ்சிக்கு சிவகார்த்திகேயனும் மாறிவிட்டதாக திரைத்துறையினர் கூற துவங்கியுள்ளனர்.
ஆனால், ஒருபக்கம் தயாரிப்பாளருக்கு சரியான வசூல் வரவில்லை எனத்தெரிகிறது. அதாவது, மல்டி பிளக்ஸ் தியேட்டரை தவிர மற்ற தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையும் படிங்க: பெட் ரூம்ல அனகோண்டா புகுந்துடுச்சா? படுக்கையறையில் பண்ணக்கூடாததை பண்ணிய ஷாலு ஷம்மு!
ஆனால், யாரும் அதை பின்பற்றவில்லை. தியேட்டர்களில் முழு இருக்கைகளிலும் ரசிகர்கள் அமர வைக்கப்பட்டு வருகின்றனர். இதில், புத்திசாலித்தனமாக 50 சதவீத ரசிகர்களுக்கு டிக்கெட்டும், மற்றவர்களுக்கு டோக்கனையும் கொடுத்து உள்ளே அனுப்பி விடுகிறார்களாம்.
மேலும், அந்த வருமானத்தை தயாரிப்பாளரிடமும் காட்டுவதில்லையாம். எனவே, இதன் மூலம், லாபத்தில் பாதி தயாரிப்பாளருக்கு செல்லாமல் தியேட்டர் அதிபர்களே பதுக்கிவிடுவதாக பிரபல வலைப்பேச்சு யுடியூப் சேனலில் கூறப்பட்டுள்ளது. அதாவது அரசையும் ஏமாற்றி, தயாரிப்பாளரையும் ஏமாற்றி திரையரங்க அதிபர்கள் ஆட்டையை போடுவது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருந்தா சினிமா எப்படி பிழைக்கும்?…