விஜய் கேட்டும் நான் செய்யல!. அவர் படம் பிளாப்!. அதுதான் அவருக்கு கோபம்!.. உடைச்சிட்டாரே சுந்தர்.சி..

by சிவா |   ( Updated:2024-05-05 11:07:14  )
sundar c
X

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், கார்த்திக் என பல நடிகர்களையும் வைத்து படமெடுத்தவர் சுந்தர் சி. இவர் படம் என்றாலே கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. குடும்ப கதையில் காதல், செண்டிமெண்ட், காமெடி என எல்லாம் கலந்து ரசிகர்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை கொடுத்துவிடுவார். சுந்தர் சி படமென்றால் குடும்பத்துடன் தியேட்டருக்கு போவார்கள்.

குறிப்பாக சுந்தர் சியின் படங்களில் காமெடி காட்சிகள் தூக்கலாக இருக்கும். அவரின் உள்ளத்தை அள்ளித்தா, வின்னர், கிரி ஆகிய படங்களில் காமெடி காட்சிகள் இப்போதுவரை எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. வடிவேலுவின் அல்டிமேட் காமெடியாக அமைந்தது எல்லாமே சுந்தர் சி இயக்கிய படங்கள்தான்.

இதையும் படிங்க: அட்லீக்கெல்லாம் அண்ணன் இவர்தான்!.. சுந்தர் சியை பக்கத்திலேயே வச்சு பங்கமா கலாய்த்த பிரசாந்த்!..

திரையுலகில் சில கூட்டணி கடைசி வரை இணையாமலே போய்விடும். அது சுந்தர் சி - விஜய் கூட்டணிதான். விஜயை வைத்து ஒரு படம் இயக்க முடியவில்லை என்பது எனக்கு வருத்தம்தான் என சுந்தர் சி பல பேட்டிகளிலும் சொல்லி இருக்கிறார். விஜயை சந்தித்து சில கதைகளை சொல்லியிருக்கிறார்.

sundar c

விஜய்க்கு பிடித்திருந்தும் சில காரணங்களால் அது நடக்கவில்லை. சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சுந்தர் சி ‘உள்ளத்தை அள்ளித்தா படத்தின் தயாரிப்பாளர் ஜோசியத்தை மிகவும் நம்புவார். அப்படத்தை 1996 ஜனவரி 15ம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என ஜோசியர் சொல்லிவிட தயாரிப்பாளர் அதில் குறியாக இருந்தார். நாங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டோம்.

இதையும் படிங்க: சுந்தர் சி-யிடம் வாய்ப்பு கேட்ட நாகேஷ்!. அதுவும் எப்படி தெரியுமா?.. இப்படியெல்லாம் நடந்துச்சா!…

அப்போதுதான் விஜயின் ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ படத்தை அதே தேதியில் வெளியிட எஸ்.ஏ.சந்திரசேகர் ஆசைப்பட்டார். அவர் என்னை தொடர்பு கொண்டு உள்ளத்தை அள்ளித்தா படத்தின் ரிலீஸை 10 நாட்கள் தள்ளி வைக்குமாறு கேட்டார். ஆனால், தயாரிப்பாளர் மறுத்துவிட்டார். 2 படங்களும் ஒரே தேதியில் வெளியானது.

ஆனால், விஜய் படம் ஃபிளாப் ஆகிவிட ‘உள்ளத்தை அள்ளித்தா’ சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது. இது விஜய்க்கும், அவரின் அப்பா எஸ்.ஏ.சிக்கும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் என நினைக்கிறேன். அதனால்தான் எனது இயக்கத்தில் விஜய் கடைசி வரை நடிக்கவில்லை என நினைக்கிறேன்’ என சுந்தர் சி சொல்லி இருந்தார்.

Next Story