உண்மையிலேயே என்ன நடந்தது? வெளியான ‘விடாமுயற்சி’ வீடியோ குறித்து ஆரவ் போட்ட அதிரடியான பதிவு

by Rohini |
aarava
X

aarava

Vidamuyarchi Movie: யாரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. திடீரென வெளியான விடாமுயற்சி படத்தின் ஒரு காட்சி வீடியோவால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர். மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் போன்ற நடிகர்கள் நடிக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் மீதுதான் அதிகளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

துணிவு பட வெற்றிக்கு பிறகு அடுத்ததாக ஒரு பக்கா ஆக்‌ஷன் படத்தை அஜித் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதிலிருந்தே ஆரம்பமானது அஜித் படத்திற்கு பிரச்சினை. கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்த நிலையிலும் துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் படங்கள் வெளியாக வில்லை . அவர் நடித்துக் கொண்டிருந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பும் பொருளாதார நெருக்கடியால் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: விடாமுயற்சி படப்பிடிப்பில் கவிழ்ந்த ஜீப்!.. அஜித்துக்கு என்னாச்சி?!.. வெளியான அதிர்ச்சி வீடியோ!..

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஸ்டண்ட் காட்சி வீடியோவை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டு ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். அந்த காட்சியில் நடிகர் ஆரவுடன் அஜித் கார் ஓட்டுவதை போலவும் ஒரு கட்டத்தில் கார் நிலை தடுமாறி தலை குப்புற விழுவதுமாக பதிவாகியுள்ளது.

உடனே அருகில் இருந்த டெக்னீசியன்கள் ஓடி வந்து காருக்குள் இருக்கும் இருவரையும் பத்திரமாக மீட்பதுமான காட்சி அதில் பதிவாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இது ஒரு வேளை அந்த படத்தின் காட்சியா அல்லது உண்மையிலேயே விபத்தா என்று புலம்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜயகாந்தின் பலம் – பலவீனம் என்ன?!. அட இதுக்கு கேப்டனே சொன்ன பதிலை பாருங்க!..

இந்த நிலையில் நடிகர் ஆரவ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். விடாமுயற்சி படத்தில் நடந்த ஒரு விபத்தில் நூலிழையில் நானும் அஜித்தும் உயிர் பிழைத்தோம். எங்களை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி என கூறியிருந்தார். இதிலிருந்தே அது ஒரு விபத்து தான் என தெரிகிறது. ஏற்கனவே பல ஆப்ரேஷன்களை செய்திருக்கும் அஜித் இந்த மாதிரியான ரிஸ்க்-களை எடுக்காமல் இருந்தால் நல்லது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Next Story