என் கேரக்டர் தெரிஞ்சா பெண்கள் இனி அப்படி சொல்லவே மாட்டாங்க! அரவிந்த்சாமியின் இன்னொரு பக்கம்

by Rohini |
aravind
X

aravind

Actor Aravind Swamy: 90கள் காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் தனக்கு வரும் மாப்பிள்ளை அரவிந்த்சாமி மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதை எல்லாம் நாம் பார்த்திருப்போம். அதுமட்டுமில்லாமல் அரவிந்த்சாமி கலர், அவர் மாதிரியான தோற்றம் என இளசுகளை தன் அழகால் கட்டிப் போட்டிருந்தவர் அரவிந்த்சாமி.

ரோஜா படத்தில் அவரை அணு அணுவாக ரசித்த பெண்கள் ஏராளம். பெண்கள் மத்தியில் ஒர் ஆணழகனை போல வலம் வந்தார். அஜித்தின் வரவு அரவிந்த்சாமியை பின்னுக்குட் தள்ளியது. அரவிந்த்சாமிக்கு அடுத்தபடியாக அழகு மற்றும் நிறத்தில் அஜித்தை ஒப்பிட ஆரம்பித்தனர்.

இதையும் படிங்க: பல கோடிகள் சம்பளம்.. பேன் இன்டியா ஸ்டார்!.. அஜித்தும் விஜயும் கூட இதுல சிக்கிட்டாங்களே!…

இருந்தாலும் இன்னும் அரவிந்த்சாமியின் அந்த மவுசு குறையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடல் என்ற படத்தில் நடித்திருந்தார் அரவிந்த்சாமி. ஆனால் அந்தப் படத்தில் முன்பு இருந்த அந்த மாஸ் இல்லை. அடுத்ததாக போகன் , தனி ஒருவன் போன்ற படங்களில் வில்லத்தனத்தை காட்டி வேறொரு லெவலில் வந்து இறங்கினார்.

இதையும் படிங்க: பாக்கியாவே விட்டா ஓடிடுவாங்க போல… இதுல இந்த சங்கமம் தொல்லை வேறையா…

ஹீரோவாக அரவிந்த்சாமியை ரசித்ததை விட வில்லனாக இன்னும் ரசிக்க ஆரம்பித்தார்கள். அவரை பேட்டி எடுத்த போது பெண்களுக்கு ஏன் சார் உங்கள இந்தளவுக்கு பிடிச்சிருக்கு என கேட்டப் போது ‘என் உண்மையான கேரக்டர் தெரிஞ்சால் என் பக்கமே வரமாட்டாங்க. அதுமட்டுமில்லாமல் என்னை போல் மாப்பிள்ளை வேண்டும் என்றும் சொல்லமாட்டார்கள். என்னை பற்றி என் அப்பாவுக்கு நல்லா தெரியும். அவரிடம் கேட்டுப் பார்க்க சொல்லுங்க’ என தடாலடியாக கூறினார் அரவிந்த்சாமி.

Next Story