இவரா வில்லன்?.. வேண்டவே வேண்டாம்! டேனியல் பாலாஜியை ஒதுக்கிய மாஸ் ஹீரோ
Actor Daniel Balaji: தமிழ் சினிமா இப்போது ஒரு சிறந்த நடிகரை இழந்து வாடியுள்ளது. இருக்கும் வரை ஒருவரை பற்றி உலகம் பேசாது. இல்லாத போதுதான் பேசும் என்பது டேனியல் பாலாஜியை பொறுத்தவரைக்கும் உண்மையாகியுள்ளது. டேனியல் பாலாஜியை இந்த தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ரகுவரனுக்கு அடுத்தபடியாக மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை கதிகலங்க வைத்தவர் டேனியல் பாலாஜி. விஜய்க்கு வில்லனாக பைரவா படத்தில் நடித்து அசத்தியிருப்பார். அதை போல பொல்லாதவன் படத்தில் யாருப்பா இவர்? என்று கேட்கும் அளவுக்கு கொலை நடுங்க வைத்திருப்பார். இதற்கெல்லாம் மேலாக வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பார்க்கும் போதெல்லாம் எரிச்சலடைய வைக்கும் அளவுக்கு அப்படி ஒரு கேரக்டர்.
இதையும் படிங்க: அடிச்சு தூக்கும் ஆடுஜீவிதம்!.. 3 நாளில் இத்தனை கோடி வசூலா?.. மலைத்துப் போன மலையாள திரையுலகம்!..
அந்த கேரக்டரில் நடித்து மெய்சிலிர்க்க வைத்திருப்பார். ஆனால் வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த பிறகு அந்த கேரக்டரில் இருந்து வெளியே வர அவருக்கு ஆறு மாத காலம் தேவைப்பட்டதாம். அந்தளவுக்கு உள்வாங்கி நடித்ததனால் பெரிய அளவு தாக்கம் அவருக்குள்ளயே ஏற்பட்டிருக்கிறது. படத்தில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் ஒரு சிறந்த ஆன்மீகவாதியாகவேதான் இருந்திருக்கிறார் டேனியல் பாலாஜி.
திருமணத்தை பற்றி பேசினாலே அதை பற்றியெல்லாம் பேசக் கூடாது என எழுந்து போய்விடுவாராம். மேலும் வெற்றிமாறனுக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்திருக்கிறார். சிகரெட் பிடிக்கும் பழக்கம் கொண்டவராம் டேனியல் பாலாஜி. அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த வெற்றிமாறன் முகம் எந்தளவுக்கு வாடியிருந்தது என்பதை நம்மால் உணர முடிந்தது.
இதையும் படிங்க: இதுதான் என் ட்ரீம் புராஜெக்ட்!.. கடைசி வரை சூர்யாவை விடுறதா இல்லை போல கெளதம் மேனன்!..
இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு டேனியல் பாலாஜியை பற்றி ஒரு தகவலை பகிர்ந்தார். இது டேனியல் பாலாஜியே ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூறியதாம். விஜய், கமலுடன் நடித்தவர். வேறொரு பெரிய மாஸ் ஹீரோவின் படத்தில் நடிக்க அந்த படத்தின் இயக்குனர் ஹீரோவை கேட்காமலேயே டேனியல் பாலாஜியை ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.
பிறகு யார் வில்லன் என அந்த ஹீரோ கேட்க டேனியல் பாலாஜி என இயக்குனர் சொல்லியிருக்கிறார். உடனே அந்த ஹீரோ ‘என்னை கேட்காமல் ஏன் அவரை கமிட் செய்தீர்கள்? மேலும் நடிப்பில் அவர் என்னை விட ஸ்கோர் செய்து விடுவார். அதனால் அவர் வேண்டாம். வேறொரு நடிகரை வில்லனாக போடுங்கள்’ என அந்த ஹீரோ சொன்னாராம். இந்த வீடியோவை பார்த்த பலரும் கமெண்ட்டில் அஜித் என்றே பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தனுஷால கார்த்தி பட வாய்ப்பை இழந்த இயக்குனர்! விஷயம் தெரிஞ்சு கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா?