Connect with us
kamal

Cinema News

ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை மோகம்! கொலைவெறியில் கமல் பட இயக்குனரை தீர்த்துக்கட்ட நினைத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்தவர் நடிகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான கராத்தே மணி. எம்ஜிஆர் நம்பியார் இவர்கள் கூட்டணி ரசிகர்களிடம் எந்த அளவு வரவேற்பை பெற்றதோ அதேபோல ரஜினி கராத்தே மணி இவர்கள் கூட்டணியும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. 90 களுக்குப் பிறகு ரஜினிக்கு ஆஸ்தான வில்லனாக திகழ்ந்தவர் ரகுவரன். ஆனால் 80களில் ரஜினிக்கு ஒரு சரியான வில்லனாக இருந்தவர் கராத்தே மணி.

kamal1

kamal1

ஆனால் இருவரும் சேர்ந்து குறைந்த அளவு படங்களே நடித்திருக்கின்றனர். அப்படி இருந்தாலும் இவர்கள் இருவரையும் தான் மக்கள் கொண்டாடினார்கள். இவர் ஒரு சிறந்த நடிகர் என்ற பெயரை வாங்கவில்லை என்றாலும் கராத்தே மூலம் அனைவரையும் மிரட்டியவர். கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்ற முதல் தமிழர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக விளங்கினார்.

இவரை வில்கனாக பல படங்களில் அணுகியிருக்கிரார்கள். ஆனால் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்ற ஆசையில் வில்லன் கதாபாத்திரத்தை தவிர்த்து வந்தாராம். இந்த ஹீரோ ஆசை ஒரு கட்டத்தில் இவரை நிஜ வில்லனாகவே மாற்றி இருக்கிறது.

இதையும் படிங்க : இப்போ ரஜினி vs விஜய் தான்.. அஜித்லாம் கிடையாது!.. அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்த பிக் பாஸ் பிரபலம்!..

கமலை முதன்முதலாக ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆர் சி சக்தி. அந்தப் படத்தின் பெயர் உணர்ச்சிகள். அந்தப் படத்தில் கராத்தே மணியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். அப்போது சத்தியும் கராத்தே மணியும் வீட்டில் ஒன்றாக மது அருந்திவிட்டு பேசிக் கொண்டிருந்தார்களாம். கராத்தே மணிக்கு போதை தலைக்கேற என்னை ஹீரோவாக நடிக்க எப்படியாவது வாய்ப்பு கொடுங்கள் என கேட்டாராம்.

kamal2

kamal2

இப்படி வாக்குவாதம் முற்ற போதை மேலும் தலைக்கேற இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது. உடனே கராத்தே மணி தன் வீட்டின் அறையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுக்க சென்று விட்டாராம். இதை பார்த்துக் கொண்டிருந்த அவரது வீட்டில் பணியாளர்கள் இருவர் இதை வளர விட்டால் மிகவும் ஆபத்தாகிவிடும் எனக் கருதி துப்பாக்கியை எடுக்கச் சென்ற கராத்தே மணியின் அறையை வெளிப்புறமாக பூட்டி விட்டார்களாம்.

அதே சமயம் ஆர் சி சக்தி இருந்த அறையையும் பூட்டி விட்டார்களாம். அதன் பிறகு சக்தியின் வீட்டிற்கு தொலைபேசி மூலமாக தகவல்களை கூறி அவரை வரவழைத்து சக்தியை அவர்களுடன் அனுப்பி வைத்தார்களாம். மறுநாள் கராத்தே மணியிடம் நடந்ததை எல்லாம் சொல்லி சக்தியின் தரப்பில் மன்னிப்பும் கேட்டார்கலாம். இந்த சுவாரஸ்ய தகவலை திரை விமர்சகர் வித்தகர் சேகர் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top