Cinema History
எம்.ஜி.ஆருக்கு வந்த முதல் காதல்!.. அழகா புரபோஸ் பண்ணி பல்பு வாங்கிய பொன்மன செம்மல்!..
நடிகர்களுக்கு சினிமாவில் மட்டுமில்லை. நிஜவாழ்விலும் காதல் உண்டு. அவர்களும் சாதரண மனிதர்கள்தானே. சினிமாவில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு நடிகையுடன் காதல் காட்சிகளில் நடித்தாலும் நிஜவாழ்வில் அந்த நடிகைகள் யாரும் உடன் வரப்போவதில்லை. அதேபோல், சினிமாவில் காதலில் வெற்றி பெறும் ஹீரோக்களின் காதல் நிஜ வாழ்வில் வெற்றி பெறும் என சொல்ல முடியாது.
இன்னும் சொல்லப்போனால் பல நடிகர்கள் நிஜவாழ்வில் பல காதல் தோல்விகளை பார்த்திருக்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக சிம்புவை பார்க்க முடியும். பள்ளியில் படிக்கும் போதே சில பெண்களின் மீது அவருக்கு காதல் இருந்தது. நடிகரான பின் நயன்தாரா மீது காதல் வந்து அது பிரேக்கப் ஆனது.
இதையும் படிங்க: எனக்கு மட்டும் நான்-வெஜ், தொழிலாளர்களுக்கு வெறும் முட்டையா..? ஷூட்டிங்கில் மல்லுக்கு நின்ற எம்.ஜி.ஆர்..!
அடுத்து ஹன்சிகா மோத்வானியை காதலித்தார். அதுவும் பிரேக்கப் ஆனது. ரஜினிக்கு ஒரு கூட வாலிப வயதில் ஒரு காதல் இருந்தது. கமல், பார்த்திபன், ஜெயம் ரவி, ஜீவா, சூர்யா, குஷ்பு, அஜித் – ஷாலினி என திரையுலகில் பலரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தான்.
இந்நிலையில், எம்.ஜி.ஆருக்கு வாலிப வயதில் இருந்த காதல் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். எம்.ஜி.ஆருக்கு அவருக்கு வயது 17. அவர் வசித்துவந்த வீட்டின் எதிரே உள்ள வீட்டில் வசிக்கும் பெண் மீது அவருக்கு காதல் வந்துள்ளது. பல முயற்சிகளுக்கு பின் அப்பெண்ணிடம் காதல் கடிதம் ஒன்றயும் கொடுத்தார். ஆனால், அந்த பெண்ணிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் புகை, மது அருந்தாமல் இருந்ததற்கு காரணமான சம்பவம்!. இவ்வளவு நடந்திருக்கா!…
ஒருநாள் அந்த பெண் எம்.ஜி.ஆரிடம் பேசினார். உங்கள் சாதி வேறு. என் சாதி வேறு.. நீங்க கேரளாவை சேர்ந்தவர்.. நனோ தமிழ் பெண். எப்படி நம்ம இருவருக்கும் கல்யாணம் நடக்கும்?.. எனக்கு நீங்க காதல் கடிதம் எழுதியது வெளியே தெரிந்தால் என் வாழ்க்கை என்னவாகும்?.. என்னை யார் திருமணம் செய்துகொள்வார்?’ என கேட்டுள்ளார்.
இதைக்கேட்டு எம்.ஜி.ஆர் அதிர்ந்து போனார். ஆனாலும், இந்த விவகாரம் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. எனவே, எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா குடியிருந்த அந்த வாடகை வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு மாறினார். அதன்பின் எம்.ஜி.ஆருக்கு எப்படியாவது ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அப்படித்தான் 1939ம் வருடம் பார்கவி(தங்கமணி) என்கிற பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடந்தது. ஆனால், மாரடைப்பில் அவர் மரணமடைந்தார்.
அதன்பின் எம்.ஜி.ஆர் சதானந்தவதி என்கிற பெண்ணை திருமணம் செய்தார். அவரும் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். சதானந்தவதி படுக்கையில் இருக்கும்போதே அவர் விருப்பட்டே அவரே நடிகை ஜானகியை எம்.ஜி.ஆருக்கு மூன்றாவது திருமணத்தை செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கூட நடிச்சாலும் சிவாஜியை பாராட்டிய ஜெயலலிதா!.. அதுவும் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!…